ஒரே நாளில் ரூ.5,000 உயர்ந்த வெள்ளி விலை.. இன்று தங்கம் விலை நிலவரம் என்ன?

gold silver n 1

சென்னையில் இன்று வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ. 2,26,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.. அதே போல் இன்று தங்கம் விலையும் உயர்ந்துள்ளது.

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. பின்னர் தங்கம் விலை சற்று குறைந்தது..

இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.12,400க்கு விற்பனையாகிறது. இதனால் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.99,200க்கு செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ.226க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ. 2,26,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து.. 8 யானைகள் உயிரிழப்பு.. அசாமில் அதிர்ச்சி!

English Summary

In Chennai today, the price of silver has increased by Rs. 5,000 per kilogram and is being sold at Rs. 2,26,000. Similarly, the price of gold has also increased today.

RUPA

Next Post

பெரும் சோகம்..! பிரபல மலையாள நடிகர் - இயக்குனர் ஸ்ரீனிவாசன் காலானார்..! திரையுலகினர் இரங்கல்..!

Sat Dec 20 , 2025
Renowned Malayalam actor and director Srinivasan passed away today due to illness.
actor sreenivasan

You May Like