கொல்கத்தாவுக்கு திருப்பி விடப்பட்ட பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்..! என்ன காரணம்?

pm modi manipur 1757671639 1 1

மேற்கு வங்கத்தில் தரையிறங்க முடியாத அளவுக்குப் பனிமூட்டம் இருந்ததால், பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் கொல்கத்தாவுக்கே திரும்பிச் சென்றது.


மேற்குவங்க மாநிலம் நாதியா மாவட்டத்தில் உள்ள தஹெர்பூர் ஹெலிபாடில் தரையிறங்க முடியாததால், பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டர் சனிக்கிழமை பிற்பகல் கொல்கத்தா விமான நிலையத்துக்குத் திருப்பிவிடப்பட்டது.

அப்பகுதியில் கடும் பனிமூட்டம் (dense fog) நிலவியதால் காட்சித் தெளிவு குறைந்தது. இதன் காரணமாக ஹெலிபாடில் பாதுகாப்பாக தரையிறங்க முடியவில்லை. இதனால் ஹெலிகாப்டர் “ஹெலிபாட் மேல் சில நேரம் வட்டமடித்த நிலையில், பின்னர் யூ-டர்ன் எடுத்து கொல்கத்தா விமான நிலையத்துக்குத் திரும்பியது” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இன்று நடைபெறவுள்ள ‘பரிவர்த்தன் சங்கல்ப சபா’ என்ற பேரணியில் உரையாற்ற பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார். இந்த நிகழ்ச்சி, மேற்குவங்கத்தில் நடைபெற்று வரும் SIR (Special Intensive Revision) செயல்முறை தொடர்பான அரசியல் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத்துவம் பெற்றது.. மேலும், சில தேசிய நெடுஞ்சாலை திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியும் பிரதமரின் நிகழ்ச்சி நிரலில் உள்ளது.

பிரதமர் மோடி இன்று காலை 10.40 மணிக்கு கொல்கத்தா வந்தார். அங்கிருந்து தஹெர்பூருக்குப் புறப்பட்டபோதுதான் பனிமூட்டம் தடையாக அமைந்தது. தற்போது அவர் நிலமாற்று போக்குவரத்து வழியை (கார் போன்றவை) பயன்படுத்துவாரா அல்லது வானிலை சீராகும் வரை காத்திருந்து மீண்டும் ஹெலிகாப்டரில் செல்ல முயற்சிப்பாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

Read More : வாகன ஓட்டிகளுக்கு குட்நியூஸ்..! இனி சுங்கச்சாவடிகளில் நிற்க தேவையில்லை..! அடுத்த ஆண்டு புதிய முறை அறிமுகம்..!

English Summary

Due to dense fog that prevented landing in West Bengal, Prime Minister Modi’s helicopter returned to Kolkata.

RUPA

Next Post

இம்ரான் கானுக்கும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்குக்கும் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு.. தோஷகானா ஊழல் வழக்கில் தீர்ப்பு..!

Sat Dec 20 , 2025
தோஷகானா–2 ஊழல் வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.. இந்த தீர்ப்பு, ராவல்பிண்டி ஆதியாலா சிறையில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வழங்கப்பட்டது. சவுதி அரேபியாவிலிருந்து கிடைத்த அரிய, உயர்மதிப்புள்ள பரிசுப் பொருட்களை அரசு விதிமுறைகளை மீறி, குறைந்த விலையில் வாங்கி பின்னர் விற்று அரசுக்கு நஷ்டம் […]
imran khan and wife

You May Like