தவெக தலைவர் விஜய் முன்னிலையில் இன்று அக்கட்சியின் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது.. இந்த விழாவில் கிறிஸ்தவ பாதிரியார்கள், ஆற்காடு நவாப் உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.. அப்போது பேசிய ஆற்காடு நவாப் “ ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தின் சிறந்த உதாரணமாக தமிழ்நாடு விளங்குகிறது.. இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள் என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கு மரியாதை அளிக்கப்படுகிறது..
இங்கு மத வேறுபாடின்றி மனிதர்களாக அனைவரும் மதிக்கப்படுகின்றனர்.. இங்கு மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது.. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பான மாநிலமாக திகழ்கிறது.. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு திகழ்கிறது.. நாம் இஸ்லாமியராக இருந்தாலும் எனது மகனுக்கு என ஜீசஸ் என பெயர் சூட்டினேன்.. இயேசுவை நம்பவில்லை என்றால் நான் இஸ்லாமியரே கிடையாது.. கிறிஸ்தவத்தை நம்புவதே இஸ்லாம்.. ” என்று விஜய் முன்னிலையில் அவர் பேசினார்..
திமுக தான் தங்கள் அரசியல் எதிரி என்று கூறியுள்ள தவெக தொடர்ந்து திமுக அரசை கடுமையாக சாடி வருகிறது.. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுக்காப்பு இல்லை, ஊழல் மலிந்து கிடக்கிறது, பொருளாதார வளர்ச்சி இல்லை என்று விஜய் தொடர்ந்து பேசி வரும் நிலையில், அவர் முன்னிலையில் ஆற்காடு நவாப் முகமது அலி பேசியுள்ளது விவாத பொருளாக மாறி உள்ளது..



