தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை.. 61 காலிப்பணியிடங்கள்..! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

job 3

மத்திய அரசின் வெளியுறவுத்துறையின் கீழ் செயல்படும் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் (NFSU) தொழில்நுட்பப் பிரிவு மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


காலிப்பணியிடங்கள் – 61

பணியிட விவரம்:

  • துணை பதிவாளர் – 7
  • உதவி பதிவாளர் – 9
  • துணை பொறியாளர் – 1
  • உதவி பொறியாளர் – 5
  • புள்ளியியல் உதவியாளர் – 5
  • உதவி நூலகர் – 1
  • நூலக உதவியாளர் – 3
  • மூத்த அறிவியல் அதிகாரி – 2
  • இளநிலை அறிவியல் அதிகாரி – 3
  • மூத்த அறிவியல் உதவியாளர் – 1

வயது வரம்பு:

  • துணை பதிவாளர் பதவிக்கு அதிகபட்சம் 50 வயது வரை இருக்கலாம்.
  • மூத்த அறிவியல் அதிகாரி, உதவி பதிவாளர், உதவி நூலகர் பதவிகளுக்கு 40 வயது வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • இளநிலை அறிவியல் அதிகாரி, உதவி பொறியாளர், புள்ளியியல் பொறியாளர், துணை பொறியாளர் ஆகிய பதவிகளுக்கு 35 வயது வரை இருக்கலாம்.
  • மூத்த அறிவியல் உதவியாளர் பதவிக்கு 30 வயது வரையும்,
  • நூலக உதவியாளர் பதவிக்கு 32 வயது வரையும்,
  • ஆய்வக உதவியாளர் பதவிக்கு 27 வயது வரை வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

* துணை பதிவாளர் பதவிக்கு முதுகலை பட்டப்படிப்புடன் 9 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் அனுபவம் அல்லது 5 ஆண்டுகள் நிர்வாக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

* உதவி பதிவாளர் பதவிக்கு முதுகலை பட்டப்படிப்புடன் 3 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

* துணை பொறியாளர் பதவிக்கு சிவில் பொறியியலில் பொறியியல் பட்டம் மற்றும் 2 ஆண்டுகள் அனுபவம் தேவை.

* உதவி பொறியாளர் பதவிக்கு சிவில் அல்லது எலெக்ட்ரிக்கல் பொறியியல் பாடப்பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

* புள்ளியியல் உதவியாளர் பதவிக்கு சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டப்படிப்பு அவசியம்.

* உதவி நூலகர் பதவிக்கு முதுகலை பட்டப்படிப்புடன் NET / SLET / SET அல்லது Ph.D முடித்திருக்க வேண்டும்.

* நூலக உதவியாளர் பதவிக்கு இளங்கலை பட்டப்படிப்புடன் தட்டச்சு அறிவு தேவை.

* மூத்த அறிவியல் அதிகாரி பதவிக்கு தடயவியல் உளவியல், உளவியல், குற்றவியல், நரம்பியல் உளவியல், மருத்துவ உளவியல், புலனாய்வு உளவியல் ஆகிய துறைகளில் முதுகலை அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதுடன் 5 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

* இளநிலை அறிவியல் அதிகாரி பதவிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டப்படிப்புடன் 3 ஆண்டுகள் அனுபவம் தேவை.

* மல்டிமீடியா தடயவியல் பிரிவு – மூத்த அறிவியல் உதவியாளர் பதவிக்கு கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், சைபர் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பொறியியல் அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்கலாம்.

* ஆய்வக உதவியாளர் பதவிக்கு இளங்கலை பட்டப்படிப்பு அவசியம்.

தேர்வு செய்யப்படும் முறை: துணை பதிவாளர், உதவி பதிவாளர், உதவி நூலகர் மற்றும் மூத்த அறிவியல் அதிகாரி பதவிகளுக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதர பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அதனைத்தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்பு பணி வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது? இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://nfsu.ac.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.01.2026.

Read more: குட்நியூஸ்..! இந்தியாவில் மருந்துகளின் விலை குறையப் போகிறது..! முழு விவரம்..!

English Summary

Job at the National Forensic Science University.. 61 vacancies..! Who can apply..?

Next Post

உங்கள் குழந்தைகள் அதிகமாக மொபைல் போன் பார்க்கிறார்களா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க! என்ன மேஜிக் நடக்கதுன்னு பாருங்க..!

Wed Dec 24 , 2025
இன்றைய தொழில்நுட்ப யுகத்தில், செல்போன்கள் குழந்தைகளின் வாழ்க்கையின் ஒரு பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. ஒரு கைக்குழந்தை கூட கைபேசி வேண்டும் என்று அடம் பிடிப்பது இப்போது சாதாரணமாகிவிட்டது. குழந்தைகள் வளர வளர, விளையாட்டுகள், வாசிப்பு மற்றும் பொழுதுபோக்கு என அனைத்தும் கைபேசித் திரைக்குள்ளேயே சுருங்கிவிடுகின்றன. ஆனால், அதிகப்படியான திரை நேரம் குழந்தைகளின் உடல், மன மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஒரு பெரிய சவாலாக மாறி வருகிறது. தங்கள் குழந்தைகளை கைபேசி […]
children mobile phone 1

You May Like