மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. ஆரம்ப சம்பளம் ரூ.70,000.. பொறியியல் பட்டதாரிகளுக்கு செம சான்ஸ்..!

job 2

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இன்ஜினியர்ஸ் இந்தியா (Engineers India) நிறுவனத்தில் அனுபவமுள்ள பொறியாளர் மற்றும் அனுபவமுள்ள நிபுணர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


காலிப்பணியிடங்கள் – 64

பொறியாளர் காலிப்பணியிடங்கள்

  • இணை பொறியாளர் கிரேடு III (சிவில்) – 8
  • மெக்கானிக்கல் – 10
  • வெல்டிங் – 7
  • எலெக்ட்ரிக்கல் – 6
  • இன்ஸ்ரூமெண்டேஷன் – 3
  • இணை பொறியாளர் கிரேடு IV (சிவில்) – 2
  • மெக்கானிக்கல் – 4
  • வெல்டிங் – 1
  • எலெக்ட்ரிக்கல் – 1

நிபுணர்களுக்கான காலிப்பணியிடங்கள்

  • உதவி பொது மேலாளர் – 5
  • மூத்த மேலாளர் – 3
  • மேலாளர் – 8
  • துணை மேலாளர் – 5

தகுதிகள்:

இணை பொறியாளர்: இணை பொறியாளர் கிரேடு 3 பதவிகளுக்கு 41 வயது வரையும், கிரேடு 4 பதவிகளுக்கு 45 வயது வரையும் இருக்கலாம். அந்தந்த பொறியியல் பாடப்பிரிவுகளில் B.E./ B. Tech./ BSc (Engg) ஆகிய கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 9 முதல் அதிகபடியாக 13 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உதவி பொது மேலாளர்: 44 வயது வரை இருக்கலாம். மெக்கானிக்கல், கெமிக்கல், எலெக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ரூமெண்டேஷன் ஆகியவற்றில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

இதர பதவி: மூத்த மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் பதவிகளுக்கு 40 வயது வரை இருக்கலாம். மேலாளர் பதவிக்கு 36 வயது வரை இருக்கலாம். துணை மேலாளர் பதவிக்கு 32 வயது வரை இருக்கலாம். இப்பணியிடங்களுக்கு எலெக்ட்ரிக்கல், கெமிக்கல், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், சிவில் ஆகியவற்றில் பொறியியல் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

  • இணை பொறியாளர் கிரேடு 3 பதவிக்கு ரூ.86,400 முதல் ரூ.96,000
  • இணை பொறியாளர் கிரேடு 4 பதவிக்கு ரூ.1,00,800 முதல் ரூ.1,12,000
  • உதவி பொது மேலாளர் பதவிக்கு ரூ.1,00,000 – 2,60,000 வரை
  • மூத்த மேலாளர் பதவிக்கு ரூ.90,000 – ரூ.2,40,000 வரை
  • மேலாளர் பதவிக்கு ரூ.80,000 – ரூ.2,20,000 வரை
  • துணை மேலாளர் பதவிக்கு ரூ.70,000 – 2,00,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: இணை பொறியாளர் (Grade 3 & 4) பணியிடங்களுக்கான நேர்காணல்கள் 2026 ஜனவரி 12, 13, 19, 21, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இந்த நேர்காணல்கள் ஹரியானா மாநிலம் குருகிராமில் நடத்தப்படுகின்றன. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி மற்றும் அனுபவ விவரங்கள் முதலில் சரிபார்க்கப்படும். தகுதியானவர்களுக்கு மட்டுமே நேர்காணலில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும்.

இதர பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்களிடமிருந்தும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு நேர்காணல் அழைப்புகள் அனுப்பப்படும். ஆன்லைன் விண்ணப்பம் கட்டாயமாகும்.

எப்படி விண்ணப்பிப்பது? இன்ஜினியர்ஸ் இந்தியா பொதுத்துறை நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு https://recruitment.eil.co.in/ என்ற நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் – 02.01.2026.

Read more: Business idea: ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம் தரும் ஆடு வளர்ப்பு.. கிராமத்தில் இருந்தே கோடீஸ்வரர் ஆகலாம்..!

English Summary

Engineers India has announced a recruitment notification for engineers and experienced professionals.

Next Post

போஸ்ட் ஆபீஸின் அசத்தல் திட்டம்..!! மாதந்தோறும் வட்டியே ரூ.5,500 கிடைக்கும்..!! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..!!

Thu Dec 25 , 2025
கடின உழைப்பால் ஈட்டிய பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்து, அதில் இருந்து ஒரு நிரந்தர வருமானம் கிடைக்க வேண்டும் என்பதுதான் நடுத்தர வர்க்கத்தினரின் மிகப்பெரிய விருப்பமாக உள்ளது. குறிப்பாக, ஓய்வுக்காலத்திற்குப் பிறகு கை செலவுக்கு பிறரை எதிர்பார்க்காமல் வாழ விரும்புவோருக்கு, தபால் நிலையங்கள் (Post Office) வழங்கும் சேமிப்புத் திட்டங்கள் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. அந்த வகையில், தற்போது மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ள ‘தபால் அலுவலக மாதாந்திர வருமானத் […]
Post Office 2025

You May Like