தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் (TNOU) உதவிப் பேராசிரியர் ஆக விரும்புபவர்களுக்கு முக்கிய வாய்ப்பு உருவாகியுள்ளது. பல்வேறு பாடப்பிரிவுகளில் மொத்தம் 11 தற்காலிக உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் – 11
- ஆங்கிலம் – 1
- கணிதம் – 2
- வேதியியல் – 1
- புவியியல் – 1
- வரலாறு – 1
- உளவியல் – 2
- அரசியல் அறிவியல் – 1
- சிறப்பு கல்வியியல் – 2
தகுதி: உதவிப் பேராசிரியர் பதவிக்கு அந்தந்த பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் UGC/CSIR ஆகியவற்றில் நடத்தப்படும் SLET/SET/NET ஆகியவற்றில் தகுதிப் பெற்றிருக்க வேண்டும். மேலும், Ph.D பட்டம் பெற்றவர்களும், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: உதவிப் பேராசிரியர் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேர்காணல் தேதி: 05.01.2026 காலை 10.30 மணி
இடம்: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் 577, அண்ணா சாலை, சைதாப்பேட்டை, சென்னை – 600 015.
எப்படி விண்ணப்பிப்பது? தமிழ்நாடு மாநில திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள உதவிப் பேராசிரியர் பணிக்கான நேரடி நேர்காணலில் கலந்துகொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள், முதலில் விண்ணப்பப் படிவத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, https://tnou.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் தனது புகைப்படத்தை ஒட்டி, கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். நேர்காணலுக்கு வரும்போது,
- அடையாள அட்டை
- கல்வித் தகுதி சான்றிதழ்கள்
- உதவிப் பேராசிரியர் தகுதி சான்றிதழ்
- அனுபவ சான்றிதழ்கள் (இருந்தால்)
ஆகிய அனைத்து ஆவணங்களின் நகல்களையும் இணைத்துக் கொண்டு வர வேண்டும். மேலும், மேற்கண்ட சான்றிதழ்களின் அசல் பிரதிகளையும் நேர்காணலின் போது கட்டாயமாகக் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் உதவிப் பேராசிரியர் தகுதி பெற்றவர்கள், இந்தப் பணியிடங்களுக்கான நேரடி நேர்காணலில் பங்கேற்கலாம். நேர்காணல் தொடர்பான கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read more: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சுக்கிர திசை தொடங்குகிறது! டபுள் ஜாக்பாட் கிடைக்கும்..!



