fbpx

ரேஷன் கார்டில் உங்கள் குழந்தையின் பெயரை இணைத்துவிட்டீர்களா..? சலுகையை மிஸ் பண்ணிடாதீங்க..!! உடனே வேலையை முடிங்க..!!

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் புதிதாக பிறந்த குழந்தையின் பெயரை எப்படி இணைப்பது என்பது குறித்து தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு அரசின் அனைத்து சலுகைகளும் ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரேஷன் கார்டு வைத்திருப்போர் தங்கள் குழந்தைகளின் பெயரையும் அதில் சேர்த்தால் அதிகமான பலன்கள் கிடைக்கும். அது எப்படி சேர்ப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இதற்காக நீங்கள் எங்கும் அலைய தேவையில்லை. வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமாக சுலமாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

— முதலில் மாநில உணவுத் துறை இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

— அதில் “Add Member To Ration Card” என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

— அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

— பின்னர், Submit பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களுடைய விண்ணப்பம் பதிவு செய்யப்படும்.

— விண்ணப்பத்தின் நிலையை சரிபார்க்க “Check Beneficiary Status” விருப்பத்தை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

  • குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்
  • குடும்பத் தலைவரின் ஆதார் அட்டை
  • ரேஷன் கார்டு
  • குழந்தையின் ஆதார்

Chella

Next Post

கருப்பு கலர் கண்ணாடியை மட்டும் கண்பார்வையற்றோர் அணிவது ஏன்..! இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கா.?

Wed Jan 10 , 2024
கண்பார்வையற்றவர்களில் பெரும்பாலானவர்கள் கருப்பு கண்ணாடி அணிந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். கண்பார்வை உடையவர்கள் சூரிய ஒளியினால் கண் கூசுவது மற்றும் கண் எரிச்சல் போன்றவற்றில் இருந்து தவிர்ப்பதற்காக கருப்பு கண்ணாடி அணிகிறார்கள். ஆனால் கண் பார்வை அற்றவர்கள் ஏன் கருப்பு கண்ணாடி அணிய வேண்டும்.? என்ற கேள்வி நமக்குள் எழும். இதற்கான அறிவியல் ரீதியான காரணமும் இருக்கிறது. பொதுவாக கண் பார்வையற்றவர்களால் காட்சிகளை காண முடியாது என்றாலும் அவர்களால் ஒளியை உணர […]

You May Like