“ என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? CM ஸ்டாலினின் ஓபன் சேலஞ்ச்-க்கு இபிஎஸ் பதிலடி..!

puthiyathalaimurai 2024 03 b36f000c 4144 4c99 8019 2d65ed6ad568 5

நேற்று கள்ளக்குறிச்சியில் நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் திமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். மேலும் “ மூச்சுவாங்கும் அளவுக்கு இவ்வளவு மேஜர் சாதனைகளை செய்து கொண்டிருக்கிறோம்.. எந்த துறை எடுத்துக் கொண்டாலும் சாதனைகள்.. ஒன்றிய அரசு வெளியிடும் அறிக்கைகளில் நம்பர் 1 தமிழ்நாடு தான். இதில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சியில் நடந்ததா? இது எனது ஓபன் சேலஞ்ச்.. தைரியம் இருந்தால் சொல்லுங்க.. 5 % சொல்லுங்க..” என்று ஓபன் சேலஞ்ச் விடுத்தார்..


இந்த நிலையில் முதல்வர் விடுத்த ஓபன் சேலஞ்ச்-க்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொடுத்துள்ளார்.. மேலும் திமுக ஆட்சி பற்றி எனது கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லத் தயாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்..

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “ நேற்று கள்ளக்குறிச்சியில் மேடை ஏறி ஓபன் சேலஞ்ஜ் விடுத்த பொம்மை முதல்வரே… நீங்கள் மேடை போட்டு பேசிய அந்த கள்ளக்குறிச்சி மாவட்டமே எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் தான் உருவானது என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? நீங்கள் நின்றுப் பேசிய அதே கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி சொல்லும், அஇஅதிமுக ஆட்சியின் சாதனை என்னவென்று! அஇஅதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி ஸ்டிக்கர் ஒட்டுவதையே 95% வேலையாகக் கொண்ட நீங்கள், 5% திட்டங்கள் பற்றி எல்லாம் கேள்வி கேட்கலாமா? அதற்கு கொஞ்சமாவது உங்களுக்கு தகுதி இருக்கிறதா?

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை, பெண்கள் பாதுகாப்பைச் சீர்குலைத்துவிட்டு, எங்கு திரும்பினாலும் ஆசிரியர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைவரையும் நடுத்தெருவில் போராட நிறுத்திவிட்டு, Collar-ஐ தூக்கிப் விட்டு பேசுகிறீர்களே…

உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா? 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் என்று போகிற போக்கில் அளந்து விட்டால் மக்கள் நம்பி விடுவார்களா? எத்தனை லேப்டாப் யாருக்கு போய் சேர்ந்தது? தேர்தல் பயத்தில், நான்கரை ஆண்டுகள் கொடுக்காமல் தற்போது அவசர கதியில் அரைகுறையாக கொடுக்கப் போவதை பெருமை பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா? செல்போன் ரீசார்ஜ் செய்தாலே ஓராண்டுக்கு AI சந்தா இலவசமாக கிடைக்கும் நிலையில், அதே AI சந்தாவை 6 மாதத்திற்கு மட்டுமே வழங்கப் போவதாக தெரிவித்துள்ளது உங்கள் விடியா அரசு. இதெல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பதை அறிவார்ந்த மாணவர்களுக்கு தெரியும். திரு. ஸ்டாலின் அவர்களே- நீங்கள் மூச்சு இரைக்க வாசித்த பட்டியல் என்பது, நீங்கள் நடத்திய போட்டோஷூட்களின் பட்டியல்.

இதேபோல், நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனையை நிறைவேற்றினீர்கள் என்பதையும் இதேபோல் வாசிக்கத் தயாரா? (கவலை வேண்டாம். மூச்சு இரைக்க வாய்ப்பே இல்லை!) அப்புறம்… ஏதோ Open challenge என்று சொன்னீர்களே… பல ஆண்டுகளாக உங்களுக்கு நான் வைத்த ஒரு ஓபன் சேலஞ்ச் Pending-ல் இருக்கிறது… என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? அஇஅதிமுக ஆட்சி பற்றி நீங்கள் என்ன கேட்டாலும் நான் பதில் சொல்லத் தயார். திமுக ஆட்சி பற்றி எனது கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லத் தயாரா? OPEN CHALLENGE IS STILL ON!” .. (பி.கு. : கேள்வி 1- #நீட்_ரத்து_என்னாச்சு?) என்று பதிவிட்டுள்ளார்..

Read More : தமிழ்நாட்டின் வளர்ச்சி தான் பலரின் கண்களை உறுத்துகிறது.. வயிறு எரிகிறது.. அவர்கள் நினைப்பது நடக்காது.. CM ஸ்டாலின் உறுதி!

RUPA

Next Post

தற்கொலை முயற்சி செய்த அஜிதாவுக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை.. விஜய்க்கு சிக்கல்?

Sat Dec 27 , 2025
அரசியல் கட்சிகள் என்றாலே அதில் உட்கட்சி பூசல் இருப்பது சகஜம் தான்.. அந்த வகையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திலும் கோஷ்டி மோதல் தலைதூக்க தொடங்கி உள்ளது.. தூத்தூக்குடியில் அஜிதா ஆக்னல் என்ற பெண் பணியாற்றி வந்த நிலையில், அவருக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்காமல் புதிய நபர் ஒருவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.. இந்த தகவலை அறிந்த அதிருப்தியாளர்கள் கடந்த 23-ம் தேதி தவெக தலைமை அலுவலகத்தில் முகாமிட்டிருந்தனர். […]
vijay ajitha

You May Like