“ இங்கு இருப்பது படிக்கும் கூட்டம்.. கையை கடிக்கும் கூட்டம் அங்கு இருக்கு..” தவெகவை கடுமையாக விமர்சித்த சீமான்..!

TVK Vijay NTK Seeman

சென்னை திருவேற்காட்டில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.. இந்த கூட்டத்தில் அக்கட்சி சீமான் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ இலவசமாக மிக்சி, கிரைண்டர், டிவி, லேப்டாப் என்பதை போல் நான் வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் தருவதாக வாக்குறுதி தரலாமா? இலவசம் என்பது வளர்ச்சித்திட்டம் இல்லை அது வீழ்ச்சி திட்டம், தேசத்தை நாசமாக்கும் ஒரு திட்டம் தான் இலவசம்.. இலவசத்திற்கான பணம் எங்கிருந்து வருகிறது? இலவசத்திற்கான பணத்தை வைத்துக் கொண்டு மக்கள் வாழ்வை வளமாக்குங்கள்.. வளர்ச்சியை கொண்டு வந்ததால் இலவசமாக நீங்கள் தரும் அனைத்தையும் அவரவர், அவரவர் பணத்தில் வாங்கிக் கொள்வார்..


இலவச பயணம் தேவையில்லை.. உலகத்தின் ஆகச்சிறந்த கல்வியை தாருங்கள்.. எல்லாமே பெரியார் என்பவன் எனக்கு ஓட்டுப்போட வேண்டாம்.. நம் முன்னோர்கள் தான் பெரியார் என்பவன் என் பக்கம் வரட்டும்.. என் இனத்தின் முன்னோர்கள் அனைவரும் பெரியார் தான்..

எங்கள் ஊரில் கரகாட்டத்தை பார்க்க கூட கூட்டம் வரும்.. ஊழல், லஞ்சம் ஒரு பக்கம் – உண்மை, நேர்மை ஒருபக்கம் இதில் மக்கள் எந்த பக்கம்? பெரிய கட்சி என்று சொல்வார்கள்.. ஓட்டுக்கு காசு கொடுத்தால் ஓட்டு போடுவான்.. காசு கொடுத்தால் மாநாட்டிற்கு வருவார்கள்..

படிக்கும் கூட்டம் எல்லாம் ஒரு இடத்தில் கூடுகிறது.. கையை கடித்த கூட்டம் எல்லாம் ஒரு இடத்தில் கூடுகிறது.. அதை சொன்னால் கோபித்து கொள்கின்றனர்.. நாங்கள் அணில் தானே, காயை கடித்தோம் கனியை கடித்தோம்.. அப்போதெல்லாம் பேசாமல் இருந்துவிட்டு கையை கடிக்கும் போது கத்துகிறீர்கள் என்கிறார்கள்..

எல்லாவற்றையும் திரை போட்டு மூடியவர்கள் நமது வளர்ச்சியையும் திரை போட்டு மூட நினைக்கிறார்கள்.. ஆனால் அது இனியும் நடக்காது.. நாட்டை நாசமாக்கிய திராவிட சித்தாந்தத்திற்கும், தமிழ் தேசியத்திற்கும் இடையே தான் போட்டியே.. இந்த போட்டி தான் 2010-ம் ஆண்டில் இருந்து தேர்தல் அரசியல் களத்தில் இருந்து நடந்து வருகிறது..” என்று தெரிவித்தார்..

Read More : “ என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? CM ஸ்டாலினின் ஓபன் சேலஞ்ச்-க்கு இபிஎஸ் பதிலடி..!

RUPA

Next Post

குட்நியூஸ்..! புதிய கேஸ் இணைப்பு குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு.. ரூ. 300 மானியமும் கிடைக்கும்!

Sat Dec 27 , 2025
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் நாடு முழுவதும் கோடிக்கணக்கான ஏழைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறது. ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கும் தூய்மையான கேஸ் சிலிண்டரை வழங்கும் நோக்குடன் மத்திய அரசு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, டிசம்பர் 1, 2025 நிலவரப்படி, இந்தத் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை 10.35 கோடியாக உயர்ந்துள்ளது. விறகு அடுப்புகளால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து கிராமப்புறப் பெண்களை விடுவிப்பதில் இந்தத் திட்டம் […]
Gas Subsidy 2025

You May Like