16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாரதிராஜா. இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜக்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் என பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கினார். இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் இவர் தனது பயணத்தை துவங்கினார். ஆயுத எழுத்து படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதன்பின், பாண்டியநாடு, குரங்கு பொம்மை, ஈஸ்வரன், ராக்கி, நம்ம வீட்டு பிள்ளை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதனிடையே கடந்த 2025 மார்ச் மாதம் பாரதிராஜாவின் மகனும் பிரபல நடிகருமான மனோஜ் பாரதிராஜா காலமானார். இவருடைய மரணம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தன்மகன் மனோஜ் மறைவுக்குப் பிறகு பாரதிராஜா கடும் மன உளைச்சலில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் ஓய்விலிருந்து வந்தார். அண்மையில் சென்னை திரும்பிய பாரதிராஜா நீலாங்கரையில் உள்ள அவருடைய வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில் தான் கடந்த 27 ஆம் தேதி பாரதிராஜாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அவரை சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்த அவருக்கு வீசிங் போன்ற சுவாச பிரச்சினை ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
Read more: இந்து சமய அறநிலையத்துறையில் வேலை.. ரூ.48,700 வரை சம்பளம்.. உடனே விண்ணப்பிங்க!



