கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் விசாரணை மேற்கொண்டு வந்தது.
இதனிடையே கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது.. மேலும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிட்டது.. அதன்படி இந்த வழக்கை கடந்த 19-ம் தேதி முதல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
காவல்துறை அதிகாரிகள், வீடியோகிராபர்கள், ஆம்புலன்ஸ் ட்ரைவர்கள், உரிமையாளர்கள் என 306 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில் அவர்களை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக தவெகவின் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் ஆர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது..
இதையடுத்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ், அர்ஜுனா, இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் கரூர் சிபிஐ அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜரானார்கள்.. மேலும் கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகனும், கரூர் நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோரும் விசாரணைக்காக நேரில் ஆஜரானார்கள்.. இவர்களிடம் 2 நாட்கள் விசாரணை நடந்தது..
இந்த சூழலில் கரூர் மாவட்ட காவல்துறையினர், தவெக நிர்வாகிகள் இன்று ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.. இந்த நிலையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் உள்ளிட்டோர் ஆஜராகினர்.. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக மாநில நிர்வாகிகள் ஆஜராகினர்.. அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : இந்து சமய அறநிலையத்துறையில் வேலை.. ரூ.48,700 வரை சம்பளம்.. உடனே விண்ணப்பிங்க!



