திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ’வெல்லும் தமிழ் பெண்கள்’ திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டிற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. இந்த மாநாட்டில் திமுக மகளிரணி சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியலமைப்பு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது..
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ இன்று இந்த மாநாட்டில் கடல் போல் கூடியிருக்கும் மகளிர் கூட்டத்தை பார்த்தார்கள் என்றால் சங்கி கூட்டமும், அடிமை கூட்டமும் அடுத்த 10 நாட்களுக்கு தூங்கப் போவதில்லை.. நமது தலைவரின் நல்லாட்சிக்கு இங்கு கூடியிருக்கும் மகளிரே சாட்சி..
காஷ்மீரில் இருக்கக் கூடியவர்களுக்கு கூட சுயமரியாதை, பெண்கள் உரிமை என்றால் நமது முதல்வர் பெயர் தான் நினைவுக்கு வரும்.. திராவிட இயக்கத்தின் தொடக்கம் முதலே ஏராளமான மகளிர் தொடர்ச்சியாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.. மகளிர் விடியல் பயணத்தின் மூலம் மகளிருக்கு மாதம் ரூ.900 மிச்சமாகி உள்ளது..
கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிய போது, இது என் அண்ணன் ஸ்டாலின் வழங்கும் தாய் வீட்டு சீர் என கொண்டாடுகின்றனர்.. மகளிர் நலனுக்கு பயனளிக்கும் வகையில் முதல்வர் பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார்.. திராவிட மாடல் பார்ட் ஒன் தான்.. நிச்சயம் திராவிட மாடல் 2.0வில் மேலும் பல திட்டங்கள் வர காத்திருக்கிறது..
ஆனால் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு பல்வேறு வகைகளில் தொந்தரவு கொடுத்து வருகிறது.. தமிழ்நாட்டின் அமைதியை பாசிச சக்தி சீர்குலைக்க பார்க்கிறது.. பாசிச சக்திகளின் பாட்சா ஒருபோதும் தமிழ்நாட்டில் பலிக்காது.. தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க நாங்கள் ஒன்றும் அதிமுக கிடையாது.. அண்ணா உருவாக்கிய திமுக..
பழைய அடிமைகள் புதிய அடிமைகள் என யார் வந்தாலும் டெல்லிக்கு நாம் என்றுமே அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான்.. திமுகவை பார்த்து தான் அதிமுக தேர்தல் அறிக்கை குழுவை அமைத்துள்ளது.. எப்படியும் திமுகவின் தேர்தல் அறிக்கையை அதிமுக காப்பி பேஸ்ட் செய்யப் போகிறது.. முதலமைச்சரை வெற்றி பெற வைக்க அடுத்த 100 நாட்கள் மகளிர் பணியாற்ற வேண்டும்.. சுயமரியாதை மிக்க மகளிர் இருக்கும் வரை தமிழ்நாட்டில் சங்கிகளால் கால் ஊன்றவே முடியாது.. வெல்வோம் 200.. படைப்போம் வரலாறு..” என்று தெரிவித்தார்..
Read More : மெகா கூட்டணி கன்பார்ம்.. விஜயுடன் கைகோர்க்கும் டிடிவி – ஓபிஎஸ்..? பலம் பெறும் தவெக..!



