இன்று வைகுண்ட ஏகாதசி.. பாவங்கள் நீங்கி, மோட்சம் பெற.. பெருமாளுக்கு இப்படி விரதம் இருங்க..!

vaikunda ekadasi 2025 01 b1a018894ac5180fbf7350767466ea41 16x9 1

வைகுண்ட ஏகாதாசி பெருமாளுக்குரிய அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் முக்கியமான நாளாகும்.. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.. ஆண்டு முழுவதும் வரும் 24 ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியாதவர்கள் இந்த ஒரு ஏகாதசியில் மட்டும் விரதம் இருந்தால் அது ஆண்டு முழுவதும் 24 ஏகாதசிகளின் பலன்களையும் தரும் என்பது ஐதீகம்.. மேலும் 30 கோடி தேவர்களையும் வழிபட்ட புண்ணியமும் கிடைக்கும்..


இன்றைய தினம் உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று அதிகாலையில் திறக்கப்படும் சொர்க்கவாசல் வழியாக சென்று பெருமாளை தரிசிப்பது பெரும் புண்ணியம் தரும்.. வைகுண்ட ஏகாதசி என்பது முன் ஜென்மம் மற்றும் இந்த ஜென்ம பாவங்களையும் போக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை..

எப்படி விரதம் இருப்பது?

இந்த வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.. இன்று காலை நீங்கள் பெருமாள் கோயிலுக்கு சென்று விரதத்தை தொடங்கலாம்.. இன்று நாள் முழுவதும் எந்த உணவையும் சாப்பிடாமல் இருக்க முடியும் என்றால் மிகவும் நல்லது.. இல்லை எனில் பால், பழம், துளசி நீர் அருந்தியு விரதம் இருக்கலாம்.. உடலை வருத்திக் கொண்டு கஷ்டப்பட்டு விரதம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை..

பகலில் அமைதியாக இருந்து தூய மனதுடன் பெருமாளை தியானிக்க வேண்டும்.. அன்றைய தினம் மதியம் உறங்கக் கூடாது.. மாலை கோயில்களுக்கு சென்று பெருமாளை தரிசிக்கலாம்.. இன்று இரவு முழுவதும் கண் விழித்த்து பெருமாள் கதைகளை கேட்கலாம்.. நாளை துவாதசி அன்று துளசி தீர்த்தத்துடன் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்..

பூஜை அறையில் அரிசி மாவு விளக்கு போடுவது மிகவும் சிறப்பு.. பச்சை கற்பூரம் போட்டு சர்க்கரை பொங்கல் அல்லது இனிப்பு அவல் படைத்து பெருமாளை வணங்கலாம்.. குளிர்ந்த நீர், வெல்லம், ஏலக்காய், சுக்கு, சிறிது எலுமிச்சை சாறு கலந்த பானகம் பெருமாளுக்கு மிகவும் பிடித்தது.. எனவே பானகத்தை நைவேத்யமாக படைக்கலாம்..

வைகுண்ட ஏகாதசி அன்று உபவாசமாக இருந்து இன்று இரவு கண் விழித்து மறுநாள் காலை பாரணை செய்ய வேண்டும்.. பின்னர் பல வகையான காய்கறிகள் சமைத்து உபவாசத்தை நிறைவு செய்ய வேண்டும்.. எனினும் அன்று மாலை விளக்கேற்றி பெருமாளை வழிபட்ட பிறகே, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்..

இந்த ஏகாதசி விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.. வாழ்க்கைக்கு பிறகு மோட்சத்தை மட்டுமல்ல, வாழும் போதே அளவில்லாத நல்ல பலன்களை தரும் விரதமும் ஏகாதசி விரதம் தான்.. துன்பம் தீர் வெற்றி கிடைக்க, செல்வம் சேர நோய்கள் நீங்க என்ன பிரச்சனை தீர வேண்டும் என்றாலும் ஏகாதசி விரதம் இருக்கலாம்..

Read More : 2026-ல் இந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலம்..! 50 ஆண்டுகளுக்கு பிறகு ராஜயோகத்துடன் காலம் மாறப்போகிறது!

RUPA

Next Post

இன்றே கடைசி தேதி.. இதை செய்யலன்னா நாளை முதல் இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காது..!

Tue Dec 30 , 2025
ரேஷன் அட்டைப் பயனாளிகளுக்கான ஒரு முக்கிய அறிவிப்பு இது. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் இந்த அத்தியாவசியப் பணியை டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இந்த வேலை சரியான நேரத்தில் முடிக்கப்படாவிட்டால், உங்கள் ரேஷன் விநியோகம் நிறுத்தப்படலாம். மேலும், உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட 7 வெவ்வேறு திட்டங்களின் பலன்களையும் உங்களால் பெற முடியாது. குறிப்பாக, உங்கள் ரேஷன் அட்டைக்கான e-KYC சரிபார்ப்பை டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் நீங்கள் முடிக்க […]
ration card e kyc 120719859 1

You May Like