2025 முடிந்து 2026 பிறந்துவிட்டது.. உலகம் முழுவதும் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. வண்ணமயமான ஒளி விளக்குகளுடன், பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பார்.. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் ஆங்கிலப் புத்தாண்டான இன்று தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.. சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்தார்..
ரஜினிகாந்தை பார்ப்பதற்காக இன்று காலை முதலே அவரின் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் அவரை பார்த்த உடனே தலைவா, தலைவா என உற்சாகத்துடன் ஆர்ப்பரித்தனர்.. அவரும் தனது ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கைகளை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்..
Read More : நாட்டு மக்களுக்கு மத்திய அரசு சொன்ன குட்நியூஸ்..! இன்று முதல் அமலுக்கு வரும் புதிய விதி..!



