பிப்ரவரி 1 முதல் சிகரெட் விலை எவ்வளவு உயரும்? மத்திய அரசு புதிய வரி.. பீடி, பான் மசாலா விலையும் உயரப்போகுது..!

cigarettes

சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கான கலால் (Excise) வரியில் பெரிய மாற்றத்தை மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த புதிய விதி 2026 பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. டிசம்பர் 31 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில், சிகரெட்டுகளின் நீளம் மற்றும் வகையைப் பொறுத்து, 1,000 சிகரெட்டுகளுக்கு ரூ.2,050 முதல் ரூ.8,500 வரை கூடுதல் கலால் வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக, 2026 பிப்ரவரி 1 முதல் சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்களின் விலை கணிசமாக உயரும். இந்த கூடுதல் கலால் வரி, ஏற்கனவே புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 40% ஜிஎஸ்டி (GST)க்கு மேலாக வசூலிக்கப்படும்.

ஏன் இந்த கலால் வரி உயர்வு?

புகையிலைப் பொருட்கள் மீதான கலால் வரியை உயர்த்துவதற்கான மசோதாவை சமீபத்தில் பாராளுமன்றம் நிறைவேற்றியது. இதன்படி, ஏழு ஆண்டுகளாக மாற்றமின்றி இருந்த சிகரெட்டுகளின் அடிப்படை கலால் வரி தற்போது திருத்தப்படுகிறது.

மத்திய கலால் வரி திருத்த மசோதா, ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் (GST Compensation Cess) காலாவதியான பிறகு, புகையிலைப் பொருட்களுக்கான கலால் வரியை மறுபரிசீலனை செய்யும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இது குறித்து பேசிய போது “இது செஸ் அல்ல. ஜிஎஸ்டிக்கு முன்பே கலால் வரி இருந்தது. இப்போது இழப்பீடு செஸ் மத்திய அரசிடம் திரும்பி, கலால் வரியாக வசூலிக்கப்படும். இதில் கிடைக்கும் வருவாயில் 41 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.” என்று தெரிவித்தார்..

சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்படும் தாக்கம்

இந்த புதிய கலால் வரி உயர்வின் காரணமாக, குறிப்பாக நீளமான மற்றும் பில்டர் (filter) சிகரெட்டுகளின் விலை அதிகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்பு நிறுவனங்கள் கூடுதல் வரிச்சுமையை நேரடியாக நுகர்வோரிடம் மாற்றுவார்கள். சிகரெட்டுகளுக்கு மட்டுமல்ல, குட்கா, ஜர்தா, மென்று உண்ணும் புகையிலை போன்ற புகையிலைப் பொருட்களுக்கும் புதிய வரி முறை அமல்படுத்தப்படுகிறது.

பேக்கிங் இயந்திரங்கள் 2026 என்ற புதிய விதிகளின் கீழ், பேக்கிங் இயந்திரங்களின் எண்ணிக்கை, இயந்திரங்களின் வேகம், உற்பத்தி திறன், பொருட்களின் சில்லறை விற்பனை விலை என அனைத்தையும் கணக்கில் கொண்டு, இயந்திர அடிப்படையிலான கலால் வரி விதிக்கப்படும். இந்த மாற்றங்களும் அனைத்தும் 2026 பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும்.

இனி ஒரு சிகரெட்டின் விலை எவ்வளவு ?

ஒரு சிகரெட்டின் தற்போதைய விலை ரூ.18 என்று எடுத்துக்கொண்டால், 40% ஜிஎஸ்டி சேர்த்தால் ரூ.19.70. மேலும் ஒரு சிகரெட்டுக்கு சுமார் ரூ.1 முதல் ரூ.2 வரை கூடுதல் கலால் வரி விதிக்கப்படும்..

உதாரணம்:

ரூ.19.70 + ரூ1.50 (சராசரி கலால் வரி) = ரூ.21 முதல் ரூ.22 வரை. அதாவது, பிப்ரவரி 1, 2026க்கு பிறகு ஒரு சிகரெட் ரூ.21– ரூ.22 வரை விற்கப்படலாம். 1,000 சிகரெட்டுகளுக்கு ரூ.2,050 – ரூ.8,500 வரை கூடுதல் கலால் வரி விதிக்கப்படும்.. ஏற்கனவே உள்ள 40% ஜிஎஸ்டிக்கு மேலாக இந்த வரி குட்கா, ஜர்தா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கும் இயந்திர அடிப்படையிலான கலால் வரி என அனைத்து மாற்றங்களும் 2026 பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும்.. இதனால், வரும் ஆண்டிலிருந்து புகையிலைப் பொருட்களை வாங்குவது பொதுமக்களுக்கு மேலும் செலவாகும் என்பது உறுதி.

Read More : Bank Holidays 2026 : ஜனவரி மாதத்தில் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது.. முழு லிஸ்ட் இதோ..!

RUPA

Next Post

விஜய்யுடன் கூட்டணி வைக்கும் காங்கிரஸ்..? மீண்டும் உடையப்போகிறதா கட்சி..? அரசியலில் புயலை கிளப்பும் ப. சிதம்பரம்..!!

Fri Jan 2 , 2026
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி கணக்குகள் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக, தசாப்த காலத்திற்கும் மேலாக நீடித்து வரும் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தற்போது ஏற்பட்டுள்ள விரிசல், தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தேசிய அளவில் பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் அவசியம் என திமுக தலைமை கருதினாலும், தமிழகத்தில் அக்கட்சியின் வாக்கு வங்கி மற்றும் […]
P.Chidambaram 2026

You May Like