“காங்கிரஸில் ஜிங் ஜாங் போடும் குரூப் தான் உள்ளது.. மக்களுக்காக பேச யாரும் இல்லை..” அண்ணாமலை விமர்சனம்..!

annamalai 1

சிலரின் சுயநலத்தால் தமிழக காங்கிரஸ் அழிவின் பாதையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கூறியியிருந்தார்.. மேலும் “ தமிழ்நாடு காங்கிரசில், எவ்வித  கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சிப் பிரச்சினைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. சித்தாந்த ரீதியான  அரசியலை காத்திரமாக முன்னெடுக்காமல்,மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல் , வெறும் கூட்டல் கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு,ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்பதை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர வேண்டிய நேரம் இது.” என்றும் கூறியிருந்தார்..


இந்த நிலையில் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அவர் “ காங்கிரஸை பொறுத்தவரை யார் அதிகமாக டெல்லி ஜிங் ஜாங் போடுவது என்று ஒரு குரூப், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு யார் ஜிங் ஜாங் போடுவது என்று ஒரு குரூப்.. இந்த 2 ஜிங் ஜாங் போடுபவர்களை தவிர மக்களுக்காக பேச யாரும் இல்லை.. என்னால், தமிழகத்தை, காவல்துறையை நிர்வாகம் செய்ய முடியவில்லை என்று முதலமைச்சர் சொன்னா மத்திய அரசு பார்த்துக் கொள்ளும். திமுக ஆட்சியில் தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளன..

பலவிதமான போதை பொருட்களின் பழக்கம் அதிகரித்துள்ளது.. போதை பொருட்களை தடுக்க முதல்வர் ஸ்டாலின் என்ன செய்தார்? வெளிநாட்டில் இருந்து வரும் போதை பொருட்களை மத்திய அரசு தடுக்கும்.. முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியலமைப்பு சட்டத்தை பற்றி யாராவது பாடம் எடுக்க வேண்டும்.. மாநில முதல்வரின் பொறுப்பு என்ன என்பதே அவருக்கு தெரியவில்லை.. இங்கு நிர்வாகம் செய்ய முடியவில்லை..” என்று தெரிவித்தார்.

Read More : பழைய ஓய்வூதிய திட்டம்.. நாளை முக்கிய அறிவிப்பு..! முதல்வர் ஸ்டாலின் சொல்லப்போகும் குட்நியூஸ்..!

RUPA

Next Post

பட்டாசு வெடித்து பயங்கர விபத்து.. 2 பேர் பலி.. விருதுநகரில் பெரும் சோகம்..!

Fri Jan 2 , 2026
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.. இந்தியாவில் 90% பட்டாசுகள் இங்கிருந்து தான் தயாரித்து அனுப்பப்படுகின்றன.. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு ஆலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.. உரிமம் பெறாமல் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் பெருகி உள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.. பட்டாசு விபத்துகல் தொடர்கதையாகி வரும் நிலையில் இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு […]
sivakasi fire 1641015343

You May Like