தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை போன்ற நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.. அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி பொங்கல் கொண்டாடப்படுகிறது.. பொங்கல் பண்டிகையை ஒட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் மக்கள் குடும்பத்தினருடன் கொண்டாட செல்வது வழக்கம். எனவே ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன
அந்த வகையில் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாகர்கோவில் – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் (06012) ஜனவரி 11, 18 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
தாம்பரம் – குமரி சிறப்பு ரயில் (06011) ஜனவரி 12, 19 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.30 மணிக்கு குமரி சென்றடையும்.
குமரி – தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் (06054) ஜனவரி 13, 20 ஆகிய தேதிகளில் குமரியில் இருந்து இரவு 8.30க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
தாம்பரத்திலிருந்து (06053) ஜனவரி 14, 21 ஆகிய தேதிகளில் மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
நெல்லை – செங்கல்பட்டு சிறப்பு ரயில் (06156) ஜனவரி 9, 16 ஆகிய தேதிகளில் நெல்லையில் இருந்து அதிகாலை 3.45க்கு புறப்பட்டு மதியம் 01.15 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்.
செங்கல்பட்டில் இருந்து (06155) ஜனவரி 9, 16 ஆகிய தேதிகளில் மதியம் 03.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 02.00 மணிக்கு நெல்லை சென்றடையும்.
நெல்லை – செங்கல்பட்டு சிறப்பு ரயில் (06158) ஜனவரி 10, 17 ஆகிய தேதிகளில் நெல்லையில் இருந்து அதிகாலை 3.45க்கு புறப்பட்டு மதியம் 01.15 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்.
செங்கல்பட்டில் இருந்து (06157) ஜனவரி 10, 17 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு நெல்லை சென்றடையும்.
Read More : தமிழக மக்களுக்கு ஜாக்பாட்! பொங்கல் பரிசுத் தொகை.. முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்?



