தலைவர் 173 : கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தின் இயக்குனர் இவர் தான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

rajini kamal movie

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் தவிர்க்க முடியாத நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான்.. இந்தியாவில் எத்தனையோ உச்ச நடிகர்கள் இன்னும் கோலோச்சி வருகின்றனர்.. ஆனால் 75 வயதிலும் ஒரு நடிகர், 25 வயதில் இருக்கும் அதே துள்ளல், ஸ்டைலுடன் வலம் வர முடியும் என்றால் அது நிச்சயம் ரஜினி மட்டுமே.. தனது தனித்துவமான ஸ்டைல் மற்றும் நடிப்பாலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார் ரஜினி..


எத்தனை வயதானாலும் ரஜினிக்கு இருக்கும் அந்த ஈர்ப்பு வேறு எந்த நடிகருக்கும் இல்லை என்பதே உண்மை.. அதனால் தான் ரஜினி படம் எப்போது திரைக்கு வந்தாலும் அவரின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விடுகின்றனர்.. ரஜினி படம் என்றாலே 100 கோடி வசூல் கன்ஃபார்ம் என்பதால் அவர் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றும் அழைக்கப்படுகிறார்..

அந்த வகையில் கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படம் வெளியானது.. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியில் வெற்றிப் படமாகவே அமைந்தது.. இந்த படம் சுமார் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது..

இதை தொடர்ந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க உள்ளார்.. தலைவர் 173 என்று அழைக்கப்படும் இந்த படத்தில் சுந்தர் சி இயக்க உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது.. எனினும் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவித்தார்.. இதை தொடர்ந்து அஷ்வத் மாரிமுத்து, ராம்குமார் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல இயக்குனர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த நிலையில் தலைவர் 173 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி உள்ளது.. அதன்படி ரஜினியின் அடுத்த படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தை இயக்கிவர் தான் இந்த சிபி சக்ரவர்த்தி.. டான் படத்தின் வெற்றி மூலம் தற்போது அவர் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்..

Read More : நெருங்கும் பொங்கல்.. மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அட்டவணை அறிவிப்பு..!

RUPA

Next Post

“ திராவிடத்தை முதலில் எதிர்த்தவரே திருமா தான்.. இன்று தேவைக்கு ஏற்ப மாற்றி மாற்றி பேசி வருகிறார்..” சீமான் காட்டம்..!

Sat Jan 3 , 2026
ஒருபுறம் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. மறுபுறம் அரசியல் தலைவர்களுக்கு இடையே வார்த்தை மோதல்களும் நடந்து வருகின்றன.. அந்த வகையில் தற்போது திருமாவளவன் – சீமான் இடையே நாளுக்கு நாள் வார்த்தை மோதல் வலுத்து வருகிறது.. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளன், சீமானும், விஜயும் ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள் என கூறியிருந்தார்.. அதற்கு எங்களுக்கு பிரசவம் பார்த்தவர் திருமாவளவன் தான் என சீமான் பதிலடிகொடுத்தார்.. […]
thiruma seeman

You May Like