2026 தேர்தல் : தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்? விஜய் யார் வாக்குகளை பிரிப்பார்? கருத்துக்கணிப்பு முடிவுகள்..!

stalin eps vijay

2026 தேர்தல் நெருங்கி வரும் தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. இந்த தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது..


திமுக தங்கள் வலுவான கூட்டணி உடன் ஆட்சியை தக்க வைக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.. எப்படியாவது இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அதிமுக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது.. நாம் தமிழர் தனியாக தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.. தவெக தலைமையில் ஓபிஎஸ், டிடிவி ஆகியோர் இணைந்து கூட்டணி உருவாகும் என்று கூறப்படுகிறது.. பாமக, தேமுக இன்னும் தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை..

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் என்ற கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.. தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில் 81,375 பேரிடம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளை லயோலா முன்னாள் மாணவர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் மு.க ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்வராக தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த கூட்டணிக்கு எவ்வளவு சதவீதம் வாக்குகள் கிடைக்கும்?

திமுக கூட்டணி – 30.62% வாக்குகள்

அதிமுக கூட்டணி – 26.39% வாக்குகள்

தவெக கூட்டணி – 21.7% வாக்குகள்

நாதக – 7.5% வாக்குகள்

நோட்டா, மற்றவை – 2.86%

இந்த கருத்து கணிப்பில் 34.4 சதவீத பெண்களும் 30 சதவீத ஆண்களும் பங்கேற்றனர். கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோ 31 முதல் 45 வயதினர் 41.3 சதவீதம் என்றும் லயோலா முன்னாள் மாணவர்கள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் வேட்பாளரில் எடப்பாடி பழனிசாமியை பின்னுக்கு தள்ளி தவெக தலைவர் விஜய் 2-ம் இடம் பிடித்துள்ளார்.. விஜய் வருகையால் திமுகவுக்கே அதிக பாதிப்பு, அதற்கடுத்து அதிமுக, விசிகவுக்கு பாதிப்பு இருக்கும் எனவும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் நாம் தமிழர் கட்சிக்கு சொற்ப அளவிலேயே பாதிப்பு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Read More : புதிய ஓய்வூதிய திட்டம்.. ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முதல்வருக்கு நன்றி.. போராட்டம் ரத்து என அறிவிப்பு..!

RUPA

Next Post

“ மூட நம்பிக்கைக்கு அரசு அதிகாரிகள் பணியக் கூடாது..” சென்னை உயர்நீதிமன்றம் கருத்து..

Sat Jan 3 , 2026
சென்னை எண்ணூர் நெட்டுக்குப்பம் பஜனைக்கோவில் தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார்.. இவர் தனது வீட்டில் சில மாதங்களுக்கு முன்பு காளி, வீர பத்ரர் உள்ளிட்ட சிலைகளை வைத்து வழிபாடு செய்து வந்தார்.. மேலும் கார்த்திக் தனது வீட்டில் காளி சிலையை வைத்து மாந்திரீகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.. இதையடுத்து அப்பகுதியில் சிலர் மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து அப்பகுதி மக்கள் சிலையை எடுக்கக்கோரி வலியுறுத்தினர்.. தொடர்ந்து திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணி […]
MPMADRASHIGHCOURT1

You May Like