ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு..! பொங்கல் பரிசு ரூ.3,000; வெளியான புதிய அறிவிப்பு..!

pongal gift stalin

தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.. அதன்பின்னர் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது..


202,2023, 2024 ஆகிய ஆண்டுகளில் திமுக அரசும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கியது.. ஆனால் 2025-ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ரொக்கப் பணம் எதுவும் வழங்கப்படவில்லை.. எனினும் இந்த ஆண்டு தேர்தல் வர உள்ளதால் பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூ.3000 அல்லது ரூ.5000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என்று தகவல் வெளியான வண்ணம் இருந்தது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 2 கோடிக்கும் அதிகமான அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 3,000 ரொக்கப் பணம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.. ரொக்கப் பணம் மட்டுமன்றி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு மற்றும் இலவச வேட்டி-சேலை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தி ஜனவரி 8-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.. இதையடுத்து தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகள் தொடங்க உள்ளது.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணியை ரேஷன் கடை ஊழியர்கள் மேற்கொள்ள உள்ளனர்.. அதன்படி முற்பகலில் 100 டோக்கன்களுக்கும், பிற்பகலில் 100 டோக்கன்களுக்கும் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.. டோக்கன் பெற்ற உடன் ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுடன் ரூ.3,000 ரொக்கப் பணத்தையும் பெற்றுக் கொள்ளலாம்..

Read More : Flash : திருப்பரங்குன்றம் தீப விவகாரம்.. மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி.. தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்த நீதிமன்றம்..!

RUPA

Next Post

தொடரும் வன்முறை.. வங்கதேசத்தில் மற்றொரு இந்து கொடூரமாக தாக்கப்பட்டு கொலை; 3 வாரங்களில் நடந்த 6-வது சம்பவம்.!

Tue Jan 6 , 2026
வங்கதேசத்தில் சரத் மணி சக்ரபர்த்தி என்ற 40 வயது இந்து நபர் கொல்லப்பட்டுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் வங்கதேசத்தில் நடந்த 2-வது சம்பவம் இதுவாகும். மேலும், நாட்டில் தொடரும் அமைதியின்மைக்கு மத்தியில், வெறும் 18 நாட்களில் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது நடத்தப்பட்ட 6வது கொடிய தாக்குதல் இதுவாகும். மளிகைக் கடை உரிமையாளரான சரத் மணி, திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் நர்சிங்டி மாவட்டத்தில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதாகக் […]
sarat mani chakraborty 1767677949

You May Like