Breaking : அதிமுக கூட்டணியில் இணைந்த பாமக! எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது? பரபரக்கும் தேர்தல் களம்..!

eps anbumani

2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ள நிலையில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது..


இந்த சூழலில் அதிமுக – பாமக கூட்டணி ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.. ராமதாஸ் – அன்புமணி இடையேயான மோதல் காரணமாக பாமக 2 அணிகளாக பிளவுபட்டுள்ள நிலையில் அன்புமணி தரப்பு அதிமுக கூட்டணி அமைக்க உள்ளது. அதிமுக உடன் அன்புமணி கூட்டணி வைப்பது உறுதியாகி உள்ளது. இன்று அன்புமணி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

சென்னை பசுவை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் அன்புமணி நேரில் சந்தித்து பேசினார்.. அப்போது அதிமுக – பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

கடந்த 2021 தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்தது. அப்போது பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.  அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது.. மேலும் ஒரு ராஜ்ய சபா சீட்டையும் கொடுக்க அதிமுக தலைமை சம்மதம் தெரிவித்துள்ளதாம்.. நிலவுகிறது.. எனினும் ராமதாஸ் தரப்பு கூட்டணி வைக்கிறது என்ற தகவல் வெளியாகவில்லை.

RUPA

Next Post

"பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா”..? 34,086 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!! எங்கெங்கு தெரியுமா..?

Wed Jan 7 , 2026
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தங்கள் உற்றார் உறவினர்களுடன் இணைந்து கொண்டாடுவதற்காக சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு தமிழக அரசு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. வரும் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்களின் சிரமமற்ற பயணத்திற்காக மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான சிறப்புப் பேருந்துகளை இயக்கப் போக்குவரத்துத் துறை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 9-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 14-ஆம் […]
TN Bus 2025

You May Like