Flash : பாசிட்டிவ் தீர்ப்பு வந்தாலும் ஜனநாயகன் படம் வெளியாகாது..! சென்சார் போர்டு மேல்முறையீடு..! ஷாக்கில் படக்குழுவினர்..!

Jana Nayagan Trailer 1

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.. ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.. படத்தில் ராணுவ அடையாளங்கள் தொடர்பான காட்சிகள் இருந்ததால், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சென்சார் போர்டு தரப்பு தெரிவித்தது.


இதை தொடர்ந்து பட தயாரிப்பு நிறுவனம் தனது வாதங்களை முன்வைத்தது.. அப்போது “ தணிக்கை குழுவில் பெரும்பான்மையினர் எதிர்ப்பு தெரிவித்தா மட்டுமே சான்று தராமல் நிறுத்தி வைக்க முடியும்.. அப்படி இல்லாத பட்சத்தில் மறு ஆய்வுக்கு எப்படி அனுப்ப முடியும்?  தணிக்கை வாரியம் ஒருமுறை முடிவு செய்த பின்னர் அதன் முடிவை மறு பரிசீலனை செய்ய முடியாது..” என்று வாதிட்டது.. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை 9-ம் தேதிக்கு அதாவது இன்றைக்கு ஒத்திவைத்தார்..

அதன்படி இன்று காலை ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்கக் கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.. .. ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக யு/ஏ சான்று வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. ஜனநாயகன் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவதாக எடுக்கப்பட்ட முடிவு தவறானது.. இத்தகைய புகார்களை விசாரிப்பது ஒரு ஆபத்தான போக்கிற்கு வழிவகுக்கும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.. சான்று கொடுப்பதாக ஒப்புக்கொண்ட பின்னர் அதனை மறு ஆய்வு ஆய்வுக்கு அனுப்பியது தவறானது.. ஜனநாயகன் திரைப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது..

இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு முறையிட்டுள்ளது.. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் முறையிடப்பட்டது.. மனுவாக தாக்கல் செய்யுமாறு தலைமை நீதிபதி தெரிவித்த நிலையில் சென்சார் போர்டு மேல் முறையீடு செய்துள்ளது.. இந்த மேல் முறையீட்டு மனு அவசர வழக்காக இன்று மதியம் அல்லது நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

எனவே ஜனநாயகன் படத்திற்கு யு/ஏ சான்று வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டாலும், சென்சார் போர்டு மேல் முறையீடு செய்துள்ளதால் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது..

RUPA

Next Post

இனி V2V தொழில்நுட்பம் கட்டாயம்..! நிதின் கட்கரி முக்கிய அறிவிப்பு.. சாலை விபத்துக்களை 80% குறைக்க நடவடிக்கை..!.

Fri Jan 9 , 2026
மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, விபத்துகளை குறைக்கும் புரட்சிகர நடவடிக்கையாக வாகனங்கள் ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்ளும் (Vehicle-to-Vehicle – V2V) தொழில்நுட்பத்தை விரைவில் அமல்படுத்த அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக அறிவித்துள்ளார். V2V தொழில்நுட்பம் என்றால் என்ன? இந்த முறையில், அருகில் செல்லும் வாகனங்களின் வேகம், இருப்பிடம், திடீர் வேக மாற்றம், திடீர் பிரேக், கண்ணுக்குத் தெரியாத பகுதிகளில் உள்ள வாகனங்கள் போன்ற தகவல்கள் நேரடியாக […]
gadkari announces v2v tech

You May Like