fbpx

”பிரேமா உன் இருதயத்தில்தான் நான் குடியிருக்கிறேன்”..!! சாமியாருக்குள் வந்திறங்கி அருள் வாக்கு சொன்ன விஜயகாந்த்..!!

விஜயகாந்த் நினைவிடத்தில் சாமியார் ஒருவருக்குள் வந்திறங்கிய விஜயகாந்த், அருள்வாக்கு கூறிய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி, உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். லட்சக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் முன்னிலையில் அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் நினைவிடத்தில் திரைப்பட நட்சத்திரங்கள் முதல், சாமானிய மக்கள் வரை அன்றாடம் சென்று பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சிலர், அன்னதானம் வழங்கி, கேப்டனை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மறைந்த நடிகர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு அன்னதானம் வழங்குவதற்காக சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த சாமியார் ஒருவர், காசி விஸ்வநாதர் தன் கனவில் தோன்றி, விஜயகாந்த் சமாதிக்கு சென்று சங்கு ஊதும்படி கூறியதாகவும், அதனாலேயே இங்கு வந்ததாகவும் கூறினார்.

மேலும், கேப்டன் எங்கும் போகவில்லை உங்கள் மூத்த மகன் உருவில் உங்களுடன் இருக்கிறார் என்று கூறினார். பின்னர் திடீரென அருள் வந்தது போல் கேப்டன் குரலில் பேசிய அவர், என்னை பத்தி தெரியுமில்ல? இந்த ஏழை எளிய மக்களை விட்டுட்டு நான் எங்க போகப்போறேன். பிரேமா உன் இருதயத்தில்தான் நான் குடியிருக்கிறேன் என கூறினார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Chella

Next Post

அதிர்ச்சி..!! திருவிழாவில் கோலாட்டம் ஆடிய பெண் மாரடைப்பால் திடீர் மரணம்..!!

Tue Jan 16 , 2024
தெலங்கானா மாநிலத்தில் கோலாட்டம் ஆடிக்கொண்டிருந்த பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கரப்பட்டினம் பகுதியில் நடந்த திருவிழாயொட்டி பெண்கள் வட்டமாக கோலாட்டம் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது, அதிலிருந்து பெண் ஒருவர் திடீரென குப்புற கீழே விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

You May Like