சென்னையில் அனுமதியின்றி மரக்கிளைகளை வெட்டுதல், மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகள் பொருத்துதல் ஆகியவற்றுக்கு ரூ.15,000 அபராதம் விதிக்கப்படும்.
பெருநகர சென்னை மாநகராட்சி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் பசுமைப் பரப்பினை அதிகரித்திடும் வகையில் பல்வகை மரக்கன்றுகள் நடப்பட்டு, குறுங்காடுகள் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.. பொது இடங்களில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அத்துமீறி வெட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது..
அந்த வகையில் பெருநகர் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுதல், காய்ந்து போன மரங்களை அகற்றுதல், மாற்று இடங்களில் மரங்களை நடுதல் உள்ளிட்ட சேவைகளுக்கு இதுவரை அரசு மற்றும் தனியார் விண்ணப்பங்கள் வனத்துறை மூலம் பெறப்பட்டு இந்த விண்ணப்பங்கள் மாவட்ட பசுமை குழுவுக்கு நேரடியாக அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது..
இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உரிய அனுமதியின்றி, பொது இடங்களில் மரங்களை வெட்டுபவர்களுக்கு ரூ.1 லட்சமும், மரக்கிளை வெட்டுதல், மரத்தில் ஆணி அடித்து விளம்பர பலகைகள் பொருத்துதல், மரங்களை சுற்றி விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்டவற்றுக்கு ரூ.15.000 அபராதமாக விதிக்கப்படும்.. எனவே பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மரங்கள் அகற்றுதல் மரக்கிளைகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் மற்றும் நம்ம செயலி மூலமாக பொதுமக்கள் விண்ணக்கலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
Read More : Flash : சூடுபிடிக்கும் கரூர் வழக்கு விசாரணை..! விஜய் பிரச்சார வாகனத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு..!



