கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக ரூ.320 குறைந்துள்ளது. இது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.46,480 ஆக விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,810 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,240 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,280 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் 40 காசுகள் குறைந்து ரூ.77.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.77,400 க்கு விற்பனையாகிறது.