ஆட்டத்தை தொடங்கிய இஸ்ரோ..! PSLV-C62 ராக்கெட் EOS-N1 & 14 துணை செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது..!

isro s pslv c62 successfully launches from sriharikota 1768191068

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோவின் PSLV-C62 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.. இஸ்ரோவின் PSLV-C62 ராக்கெட் புவியை கண்காணிப்பதற்கான EOS N1 செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்டது.. இது EOS-N1 எனப்படும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் அதனுடன் சேர்த்து மேலும் 14 துணை செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டன.


இந்த முழு பணி, இஸ்ரோவின் வணிக பிரிவு NewSpace India Ltd (NSIL) மூலம் மேலாண்மை செய்யப்பட்டது. இந்திய மற்றும் வெளிநாட்டு நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களின் கலவையாக உள்ளன. முக்கியமான EOS-N1 பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள், தாய்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் (UK) ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கியது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இறுதி கட்டத்தில், ராக்கெட்டின் நான்காம் நிலை (PS4) தனியாகப் பிரிக்கப்படும். அதன்பின், Kestrel Initial Technology Demonstrator (KID) எனும் சிறப்பு காப்சூல் மூலம் முக்கிய தொழில்நுட்பச் சோதனை நடத்தப்படும்.

இந்த KID காப்சூல், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்திற்கு சொந்தமானது. மேம்பட்ட மீள் நுழைவு சோதனைக்காக விஞ்ஞானிகள் PS4 நிலையை மீண்டும் இயக்கி (restart) ஒரு de-boost maneuver செய்கிறார்கள். இதன் மூலம் PS4 நிலை பூமியை நோக்கி மீள் நுழையும் பாதையில் செலுத்தப்படுகிறது.

KID காப்சூல் PS4 இலிருந்து பிரிக்கப்படும். PS4 நிலையும், KID காப்சூலும், பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்து, இறுதியாக தென் பசிபிக் பெருங்கடலில் விழும். PSLV – இஸ்ரோவின் “வேலைக்குதிரை” இந்த வெற்றியுடன், PSLV ராக்கெட் இதுவரை 63 வெற்றிகரமான பறப்புகளை நிறைவு செய்துள்ளது.

இதன் முக்கிய சாதனைகள், Chandrayaan-1 – நிலவுக்கான முதல் இந்திய பயணம், Mars Orbiter Mission (மங்கள்யான்) – செவ்வாய் கிரகப் பயணம், Aditya-L1 – சூரியனை ஆய்வு செய்யும் மிஷன் ஆகியவை ஆகும்..

PSLV ராக்கெட் மிக உயர்ந்த நம்பகத்தன்மை, பலவகை செயற்கைக்கோள்களை ஏவக்கூடிய பன்முக திறன் கொண்டதாக இருப்பதால், இஸ்ரோவின் வேலைக்குதிரை
என்று அழைக்கப்படுகிறது.

இந்த ராக்கெட்டின் பயணம் என்பது, பொறுமை, உலக சாதனைகள், இந்தியாவின் விண்வெளித் துறையில் ஏற்பட்ட பெரும் முன்னேற்றத்தை குறிக்கிறது..

RUPA

Next Post

இது மாரடைப்பு ஏற்படுவதை குறிக்கும் ஒரு அறிகுறி! உங்கள் இடுப்பு இப்படி இருந்தால், அது மிகவும் ஆபத்தானது!

Mon Jan 12 , 2026
உங்கள் இடுப்பு அளவை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? உங்கள் இடுப்பு அளவு உங்கள் இதய ஆரோக்கியத்தைப் பிரதிபலிக்கிறது. உங்கள் இடுப்பின் அளவீடு, எதிர்காலத்தில் உங்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க உதவும். இந்த அளவீடு, பெண்கள் தங்கள் உடல்நிலையை மதிப்பிடுவதற்கு மிகவும் முக்கியமானது. இடுப்பு அளவு – ஆரோக்கியத்தின் ஒரு அடையாளம்… விலா எலும்புகளுக்குக் கீழே, இடுப்பு எலும்புக்கு மேலே, மற்றும் தொப்புளைச் சுற்றியுள்ள பகுதி உடலின் […]
waist size

You May Like