நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

kamalhaasan highcourt

நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியில் தனது படங்களை பயன்படுத்த தடை கோரி கமல்ஹாசன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. நீயே விடை என்ற நிறுவனம் தனது படம், பெயரை தவறாக பயன்படுத்துவதாக கூறி கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்திருந்தார்.


உலகநாயகன் என்ற பட்டம், தனது பிரபல வசனத்தையும் அனுமதியின்றி பயன்படுத்துவதாக கமல்ஹாசன் தனது மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு இன்று சிபிஐ அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது இந்த மனுவுக்கு பதிலளிக்க நீயே விடை நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது..

மேலும் கார்ட்டூன்களில் கமல்ஹாசன் படத்தை பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்று தெரிவித்த நீதிமன்றம் நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.. இந்த வழக்கின் விசாரணை பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read More : Breaking : கரூர் பெருந்துயரம்.. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜர்..! முக்கிய கேள்விகளை கேட்க அதிகாரிகள் திட்டம்..!

RUPA

Next Post

வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த SBI..! வங்கி கட்டணங்கள் உயர்வு..! எவ்வளவு தெரியுமா!

Mon Jan 12 , 2026
அரசுக்குச் சொந்தமான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணங்களை உயர்த்தி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. பிப்ரவரி 2025-க்குப் பிறகு இந்தக் கட்டணங்கள் திருத்தப்படுவது இதுவே முதல் முறையாகும், இது நுகர்வோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இன்டர்சேஞ்ச் கட்டணங்கள் அதிகரித்ததே ஏடிஎம் சேவைகளில் கூடுதல் சுமைக்கு வழிவகுத்துள்ளது என்று வங்கி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. புதிய விதிகள் டிசம்பர் 1, 2025 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த […]
SBI money

You May Like