fbpx

குளிர்காலத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா.? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்.!

பொதுவாக குளிர் காலத்தில் அடிக்கடி சளி, இருமல் போன்ற நோய்கள் சாதாரணமாக பாதிக்கும் என்பதால் பலரும் பழங்களை சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர். ஆனால் குளிர்காலத்தில் ஒரு சில பழங்களை சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நோய் வரவிடாமல் தடுக்கலாம். குறிப்பாக ஆரஞ்சு பழம் குளிர்காலத்தில் சாப்பிடுவது குறித்து மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள சிட்ரஸ் வகை பழங்களில் ஒன்றுதான் ஆரஞ்சு பழம். இதை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி சாதாரணமாக ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களை விரட்டி அடிக்கிறது. மேலும் குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சி, அரிப்பு போன்ற பிரச்சனைகளையும் ஆரஞ்சு பழம் சரி செய்கிறது.

ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் அதிகம் காணப்படுவதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும் ரத்தத்தில் அதிகப்படியான கொழுப்பு சேரவிடாமல் செய்து இதய பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்ற நோய்கள் இருப்பவர்கள் ஆரஞ்சு பழத்தை குளிர்காலத்திலும் தாராளமாக சாப்பிடலாம்.

மேலும் ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் புற்றுநோய் செல்கள் வளரவிடாமல் செய்கிறது. கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தி பார்வை குறைபாட்டை சரி செய்கிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகள் உள்ள ஆரஞ்சு பழம் குளிர் காலத்திலும் எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் சர்க்கரை நோய், சிறுநீரகக் கோளாறு பிரச்சனை உள்ளவர்கள் பழங்கள் சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

Rupa

Next Post

யார் சொன்னாலும் நடக்காது!... அவர்கள் எல்லாம் இலவு காத்த கிளி போல தான்!… அண்ணாமலை விவகாரத்தில் ஜெயக்குமார் கருத்து!

Thu Jan 18 , 2024
அண்ணாமலை தமிழகத்திற்கு முதலமைச்சர் ஆவார் என்பது இலவு காத்த கிளி போல தான் என்று ஆடிட்டர் குருமூர்த்திக்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 107ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் […]

You May Like