Breaking : இன்றும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை..! வெள்ளி விலை ரூ.5,000 உயர்வு..! நகைப்பிரியர்கள் ஷாக்..!

jewel new

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்று காலை தங்கம் விலை மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.. அதன்படி இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,170க்கு விற்பனையாகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,05,360க்கு விற்பனை செய்யப்படுகிறது..

அதே போல் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ.292க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ.2.92 லட்சத்திற்கு விற்பனையாகிறது. தங்கம், வெள்ளி விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read More : பெண்களுக்கு மெகா பொங்கல் பரிசு..!! உரிமைத்தொகை ரூ.2,000ஆக உயர்வு..? ஓரிரு நாளில் அறிவிக்கும் CM..!! அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!

RUPA

Next Post

நகைகளின் வடிவில் தங்கம் வாங்குவது உங்கள் பணத்தை வீணாக்குவதாகும்! காரணம் தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க..!

Tue Jan 13 , 2026
பல ஆண்டுகளாக தங்கம் இந்தியக் குடும்பங்களின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருந்து வருகிறது. நாம் தங்கத்தை நகைகள், நாணயங்கள் அல்லது பிஸ்கட் வடிவில் சேமித்து வைக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளோம். தங்கம் ஒரு திடமான வடிவில் இருந்தால்தான் அது பாதுகாப்பானது என்று பலர் நம்புகிறார்கள். இருப்பினும், நவீன நிதிச் சந்தைகளில் மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது முதலீட்டாளர்கள் தங்கத்தை பௌதீக வடிவில் வாங்குவதை விட, மின்னணு வடிவில், அதாவது கோல்ட் […]
gold jewlery

You May Like