தவெகவின் அடுத்த மூவ்; விஜய் அதிரடி அறிவிப்பு.. பரபரக்கும் தேர்தல் களம்..!

vijay 2

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பிரதான அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. ஒருபுறம் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன..


அந்த வகையில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறிங்கி உள்ளது.. அந்த வகையில் சமீபத்தில் தவெக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை விஜய் அமைத்தார்..

இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 10 பேர் கொண்ட தேர்தல் பிரச்சார குழுவை விஜய் அமைத்துள்ளார்.

இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கழகத் தோழர்களுக்கு வணக்கம்.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாநில, மாவட்ட, தொகுதி அளவிலான தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள, பின்வரும் முறையில், தேர்தல் பிரசாரக் குழு அமைக்கப்படுகிறது.
தேர்தல் பிரசாரக் குழு விவரம்:

திருமதி .கேத்ரின் பாண்டியன் M.A., B.Ed

திரு. N.ஆனந்த்

திரு. ஆதவ் அர்ஜுனா B.A.

திரு. K.A.செங்கோட்டையன்

திரு. A.பார்த்திபன்

திரு. B.ராஜ்குமார் DME

திரு. K.V.விஜய் தாமு

திரு. S.P.செல்வம் DCE

திரு. திருமதி K. பிச்சைரத்தினம் கரிகாலன்

திரு. M.செரவு மைதின் (எ) நியாஸ்

மேற்கண்ட குழு. 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும். இக்குழுவிற்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Read More : தட்டித்தூக்கிய விஜய்..! அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் தவெகவில் இணைந்தார்..!

RUPA

Next Post

நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்கிறீங்களா? இந்த ஒரு தவறை செய்தால், உங்கள் லாபத்தில் 50 சதவீதத்தை இழந்துவிடுவீர்கள்!

Fri Jan 16 , 2026
ஒரே ஆண்டில் தங்கத்தின் விலை எதிர்பாராத விதமாக அதிகரித்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு கிட்டத்தட்ட 80% வருமானத்தை அளித்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு நீங்கள் தங்கத்தில் ரூ. 1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அது இப்போது கிட்டத்தட்ட ரூ. 1.8 லட்சமாக உயர்ந்திருக்கும். இது தங்கத்தை தற்போதைய சந்தையில் சிறந்த செயல்திறன் கொண்ட சொத்தாக மாற்றியுள்ளது. இந்த காரணங்களால்தான் பல முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டுப் பட்டியலில் தங்கத்தைச் சேர்க்க ஆர்வமாக உள்ளனர். […]
gold price

You May Like