பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு.. சீறிப்பாய்ந்த 16 காளைகளை அடக்கி முதல் பரிசாக காரை தட்டிச்சென்ற அஜித்..!

palamedu jallikattu

பொங்கலை முன்னிட்டு இன்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது.. இன்றைய ஜல்லிக்கட்டு போட்டி வாடிவாசலில் இருந்து 870 காளைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில், 461 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கி பரிசுகளை வென்றனர்.. மது அருந்தியது, எடை குறைவு, எடை அதிகம், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட காரணங்களால் 24 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.. மொத்தம் 9 சுற்றுகள் நடைபெற்ற நிலையில் இறுதிச்சுற்றில் மட்டும் 61 மாடுபிடி வீரர்கள் இடம்பெற்றனர்..


இந்த போட்டியின் முடிவில் பொந்துகம்பட்டி அஜித் மற்றும் பொதும்பு பிரபாகரன் ஆகிய இருவரும் தலா 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தனர்.. இதையடுத்து குலுக்கல் முறையில் முதல் பரிசு பெறும் வீரரை தேர்வு செய்யப்பட்டது.. அதன்படி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட மாடுபிடி வீரர் அஜித்திற்கு முதல் பரிசான கார் வழங்கப்பட்டது..

6 காளைகளை அடக்கி பொந்துகம்பட்டியை சேர்ந்த அஜித் முதலிடம் பிடித்தார்.. அவர் சிறந்த வீரருக்கான கார் பரிசாக தட்டி சென்றார்.. மேலும் மற்றொரு வீரரான பிரபாகரனுக்கு 2-வது பரிசான இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் களத்தில் நின்று மிரட்டிய குளமங்கலம் ஸ்ரீதரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது.. இந்த காளையின் உரிமையாளர் ஸ்ரீதருக்கு முதலமைச்சர் சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.  

மேலும் இந்த போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு வெள்ளி, தங்க நாணயங்கள், டி.வி, சைக்கிள், பீரோ உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது.. மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் 7, காளை உரிமையாளர் 9, பார்வையாளர் 8, சுகாதார ஊழியர் ஒருவர் என 25 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..

Read More : HIV-ஆல் இறந்த தாயின் உடலை தனியாக சுமந்து சென்ற 10 வயது சிறுவன்..! நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!

RUPA

Next Post

இபிஎஸ்-க்கு அடுத்த அதிர்ச்சி..!! அதிமுகவின் முக்கியப் புள்ளியை தட்டித் தூக்கிய தவெக..!!

Sat Jan 17 , 2026
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேலூர் மண்டலத்தில் அதிமுகவுக்கு ஒரு பலத்த அடி விழுந்துள்ளது. அதிமுகவின் மூத்த நிர்வாகியும், வேலூர் கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளருமான வாசு, திடீரென நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 2006 முதல் 2010 வரை மாவட்ட செயலாளராக பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், 2009 மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக […]
9c8e05bdf9a36ecb2bea5ba6ea636ee1 1

You May Like