மஞ்சுவிரட்டு.. மாடு முட்டியதில் இருவர் பலி.. சேலத்தில் சோகம்..!

manjuvirattu

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலாமாக நடைபெற்று வருகின்றன.. அதே போல் தமிழ்நாட்டில் பல இடங்களில் மஞ்சுவிரட்டு போட்டிகளும் நடைபெற்று வருகின்றன.. ஜல்லிக்கட்டின் மற்றொரு வடிவமான மஞ்சு விரட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், வேகமாக ஓடும் முரட்டு காளைகளின் கொம்புகளை பிடித்து அடக்க முயற்சிப்பார்கள்..


மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும். மாடுபிடி வீரர்கள் காளையின் திமில் அல்லது கொம்புகளைப் பிடித்து குறிப்பிட்ட தூரம் ஓட வேண்டும். காளைகளின் கொம்புகளில் கட்டப்பட்ட பணமுடிப்பை வீரர்கள் பிடிப்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் மஞ்சுவிரட்டு போட்டிகள் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன..

அந்த வகையில் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே இன்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.. இந்த போட்டியில் மாடு முட்டியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. கொண்டைம்பள்ளியை சேர்ந்த வினிதா, செந்தாரப்பட்டியை சேர்ந்த சக்திவேல் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது..

Read More : Breaking : மகளிருக்கு மாதம் ரூ.2,000; ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணம்..! அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்.. இபிஎஸ் அதிரடி..!

RUPA

Next Post

வெடிகுண்டுகளை போல வெடிக்கும் வாஷிங் மெஷின்கள்..! அவை ஏன் வெடிக்கின்றன? விபத்தை எப்படி தடுப்பது?

Sat Jan 17 , 2026
ஹைதராபாத் நகரில் உள்ள ஒரு வீட்டில் வாஷிங் மெஷின் திடீரென வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துணி துவைத்துக் கொண்டிருந்தபோது சலவை இயந்திரம் பயங்கர சத்தத்துடன் வெடித்தது அப்பகுதி மக்களைப் பீதியடையச் செய்துள்ளது. பொதுவாகத் தண்ணீருடன் இயங்கும் ஒரு சாதனம் வெடிகுண்டு போல வெடித்ததற்கான தொழில்நுட்பக் காரணங்கள் குறித்து மக்களிடையே விவாதம் தொடங்கியுள்ளது. இதுபோன்ற விபத்துகள் ஏன் நடக்கின்றன என்பதை அனைவரும் அறிந்துகொள்வது அவசியம். இந்த விபத்துக்கு முக்கியக் […]
washing machine

You May Like