பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் மிகவும் பிரபலமானவை.. அந்த வகையில் நேற்று முன் தினம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகளும், 600 மாடு பிடி வீரர்களும் களமிறங்கி உள்ளனர்.. சீறிப் பாயும் காளைகளின் திமிலை படித்து மாடு பிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர்..
இந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் 10-வது சுற்றி நிறைவடைந்து இறுதி சுற்று நடந்து வருகிறது. 39 வீரர்கள் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் காளை வெற்றி பெற்றுள்ளது.. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளையை வீரர்கள் அடக்க முயன்ற நிலையில் யாருக்கும் பிடி கொடுக்காமல் காளை வேகமாக ஓடியது.. இந்த காளையை யாரும் அடக்காதால் டிடிவி தினகரனின் காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது..
Read More : சிராவயல் மஞ்சுவிரட்டு.. மாடுகள் முட்டியதில் 123 பேர் காயம்..! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!



