ஆற்றில் தென்பட்ட மர்ம உருவம்..!! 7 தலைகள் கொண்ட ராட்சத பாம்பு..!! தீயாய் பரவிய வீடியோ..!! உண்மை என்ன..?

Viral Video 2026

ஆற்றில் 7 தலைகள் கொண்ட மர்ம உருவம் தென்பட்டதாக பரவிய வதந்தி, சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி பொதுமக்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது. ஆற்றின் மேற்பரப்பில் நீண்ட நேரமாக விசித்திரமான உருவம் ஒன்று மிதப்பதை கண்டதாக பரவிய தகவலையடுத்து, நூற்றுக்கணக்கான மக்கள் ஆற்றங்கரைகளில் திரண்டதால் அந்தப் பகுதியில் ஒருவிதப் பதற்றமான சூழல் உருவானது.


இதனை ஆன்மீக அதிசயமாக சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட, மற்றவர்கள் அச்சம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறவே தயக்கம் காட்டினர். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் உடனடியாக விரைந்து வந்து கள ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து அதிகாரிகள் அளிக்கையில், “இயற்கையில் 7 தலைகளுடன் பாம்பு இருக்க வாய்ப்பில்லை. ஆற்றில் பல பாம்புகள் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்து நீந்தும்போது அல்லது மிதக்கும் மரக்கிளைகளின் நிழல் மற்றும் நீரோட்டத்தின் வேகத்தில் ஏற்படும் காட்சி மாயை காரணமாக இத்தகைய தோற்றங்கள் தென்படலாம்” என்று அறிவியல் ரீதியான விளக்கத்தை முன்வைத்துள்ளனர்.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், வனத்துறையினர் சம்பந்தப்பட்ட அந்த ஆற்றுப் பகுதியில் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும், தகுந்த ஆதாரமில்லாத வீடியோக்களைப் பார்த்துப் பயப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Read More : குளியலறையில் இந்த பொருட்களை மட்டும் தவறி கூற வைக்காதீங்க..!! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

CHELLA

Next Post

“அன்புமணி தலைவரே கிடையாது”..!! “இனி அப்படி அழைக்காதீங்க”..!! மருத்துவர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி..!!

Mon Jan 19 , 2026
தைலாபுரம் இல்லத்தில் நடைபெற்ற பாமக அவசர செயற்குழு கூட்டம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸ் குறித்து வெளியிட்ட அதிரடி அறிவிப்பு பலரையும் திகைக்க வைத்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டிய அவர், அன்புமணி ராமதாஸ் இனி பாமக-வின் தலைவராக நீடிக்க தகுதியில்லை என்றும், கட்சியின் பெயர், கொடி மற்றும் […]
Anbumani 2025 1

You May Like