Breaking : ஒரே நாளில் ரூ.12,000 உயர்வு; புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் இதோ..!

gold silver

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.13,610க்கு விற்பனையாகிறது.. இதனால் சவரனுக்கு ரூ. 1,280 உயர்ந்து ரூ.1,08,880க்கு விற்பனை செய்யப்படுகிறது..

அதே போல் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ. 12 உயர்ந்து ரூ.330 க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்து ரூ.3.30 லட்சத்திற்கு விற்பனையாகிறது. தங்கம், வெள்ளி விலை இன்று அதிரடியாக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read More : ஷாக்கிங் நியூஸ்..!! இனி ரூ.1,000 பணம் அனுப்பினாலும் கூடுதல் ஜிஎஸ்டி வசூல்..!! SBI வங்கி அதிரடி உத்தரவு..!!

RUPA

Next Post

Breaking : 4-வது ஆண்டாக ஆளுநர் உரையை படிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் ஆர்.என்.ரவி..!

Tue Jan 20 , 2026
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.. வழக்கமாக ஆளுநர் உரையை தொடங்கும் போது நேரலை அளிக்கப்படுவது வழக்கம்.. ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக நேரலை அளிக்கப்படவில்லை.. சட்டப்பேரவையின் செய்தியாளர் அறையிலும் ஆடியோ கட் செய்யப்பட்டது.. இதனால் சற்று சலசலப்பு நிலவியது.. முன்னதாக சட்டபேரவைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் கலைஞர் கருணாநிதி வரலாறு புத்தகத்தை பரிசாக வழங்கினார்.. இந்த […]
rn ravi walkout

You May Like