தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்றார்.. அவருடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பலர் சென்றனர்.. அங்கு கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.. மேலும் பாஜக தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி காலை விருந்தளித்தார்..
இதை தொடர்ந்து பியூஷ் கோயல் – எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.. அப்போது பேசிய பியூஷ் கோயல் “ இன்று அதிமுக கூட்டணி தலைவர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் காலை விருந்து சாப்பிட்டேன். பிரதமர் மோடி, உள்துறை அமித்ஷான், பாஜகவின் புதிய தலைவர் நிதின் நபின் ஆகியோரின் வாழ்த்துகளை தெரிவித்தேன்.. எடப்பாடி பழனிசாமி எனது பழைய நண்பர்.. பிரதமர் மோடியின் தலைமை மற்றும் வழிகாட்டுதலில் கீழ் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி தமிழ்நாட்டில் இருக்கும் திமுக ஆட்சியை அகற்றும்.
ஊழல் நிறைந்த திமுக அரசு இந்த தேர்தலில் நிச்சயம் தோல்வியடையும்.. தமிழ்நாட்டு மக்களும் இளைஞர்களும் பெண்களும், விவசாயிகளும், தொழிலாளர்களும் குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி தவிர திமுக அரசு எதையும் செய்யவில்லை.. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதையும் செய்யவில்லை.. ஊழல் மட்டுமே திமுக அரசின் சாதனை.. தேசத்திற்கு எதிரான உதயநிதியின் கருத்துகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். நேற்று உயர்நீதிமன்றமும் கண்டித்துள்ளது.. தமிழ்நாட்டு மக்களை பிளவுபடுத்தும் வகையில் வெறுப்பு பேச்சை பேசிய உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவியில் இருந்து அரசில் இருந்து நீக்கப்பட வேண்டும்..
நாளை பிரதமர் மோடி தமிழக வரவிருக்கிறார்.. பிரதமர் வருவதால் மக்கள் உற்சாகமாக உள்ளனர்.. அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி நிச்சயம் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும்.. நாங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் நாங்கள் உழைப்போம்.. நாங்கள் தமிழ் கலாச்சாரத்தை மீட்டெடுப்போம்.. இந்தியாவிலேயே தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக மாற்றுவோம்..” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய இபிஎஸ் “ இன்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் எங்கள் இல்லத்திற்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.. நாளை நடைபெறும் கூட்டம் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டது.. இந்த பொதுக்கூட்டம் தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணியின் வெற்றிக்கு அச்சாரமாக அமையும். தமிழ்நாட்டில் ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது..
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி.. எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். மத்தியில் பிரதமர் ஆட்சி நடைபெறும், தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி நடைபெறும்.. தமிழ்நாடு இதுவரை இல்லாத அளவுக்கு வளர்ச்சியை பெறும்..” என்று தெரிவித்தார்.



