தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில், வேளாண்மை கமிஷனர் எல்.சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
நில நிர்வாக கமிஷனர் எஸ். நாகராஜன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக பொறுப்பு ஏற்பார்.மனித வள மேலாண்மை துறையில் செயலாளராகவும் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார். மீன்வள கமிஷனர் மற்றும் தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனர் கே.எஸ்.பழனிசாமி, நில நிர்வாக கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, மீன் வள கமிஷனராக பதவியேற்பார். தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனராகவும் செயல்படுவார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ஆர். செல்வராஜ், தமிழ்நாடு சாலை பிரிவு 2-ம் திட்டத்தின் திட்ட இயக்குனராக நியமிக்கப்படுகிறார். சென்னை-கன்னியாகுமரி தொழில் வழிச்சாலையின் திட்ட இயக்குனராகவும் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார். மேலும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக அலுவல் சாரா பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.