fbpx

நாளை அனைத்து சூதாட்ட விடுதிகளும் மூடப்படும்!… ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அறிவிப்பு!

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவா மாநிலத்தில் உள்ள அனைத்து சூதாட்ட விடுதிகளும் நாளை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

உத்தரப்பிரேதச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராக பங்கேற்று குழந்தை ராமர் சிலையை சுமந்து சென்று கருவறையில் பிரதிஷ்டை செய்யய உள்ளார். இந்த விழாவில் சுமார் 7,000 பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாக நடைபெற உள்ள ராமர் கோவில் திறப்பு விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் நாளை அரை நாள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வரும் 22 ஆம் தேதி பல்வேறு மாநில அரசுகளும் விடுமுறை அறிவித்துள்ளன.

கோவா மாநிலத்தில் ஜனவரி 22ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படும் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார். இதேபோல், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவா மாநிலத்தில் உள்ள அனைத்து சூதாட்ட விடுதிகளும் நாளை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பேசிய மெஜஸ்டிக் பிரைட் குழுமத்தின் இயக்குனர் ஸ்ரீனிவாஸ் நாயக், எல்லோரும் அதைச் செய்கிறார்கள், நாம் ஏன் அதைச் செய்யக்கூடாது. ராமர் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. எங்கள் ஊழியர்கள் பிரார்த்தனை செய்வதற்கும், ராமர் சிலை பிரதிஷ்டையின் நேரடி ஒளிபரப்பைப் பார்ப்பதற்கும் நேரம் கொடுக்கிறோம் என்று கூறினார்.

Kokila

Next Post

'இன்னைக்கு ஒரு புடி’..!! கமகம மட்டன் பிரியாணி, சிக்கன் 65..!! திமுக இளைஞரணி மாநாட்டுக்கு திரளும் தொண்டர்கள்..!!

Sun Jan 21 , 2024
சேலத்தில் இன்று துவங்க உள்ள திமுக இளைஞரணி மாநாட்டை ஒட்டி 8,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சேலத்தில் இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், இளைஞர் அணியினர் என லட்சக்கணக்கானோர் நேற்று மாலையே மாநாட்டு திடலில் திரண்டுள்ளனர். இதையொட்டி 1,500 ட்ரோன்களில் திமுக மற்றும் திராவிட வரலாற்றை பறைசாற்றும் வண்ணவிளக்குகள், இருசக்கர […]

You May Like