எச்சரித்தும் மனைவியுடன் தொடர்ந்து உல்லாசம்..!! நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் துடித்த காதலன்..!! தந்தை, மகன் வெறிச்செயல்..!!

Crime 2026 5

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர், அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளார். இவர்களின் பழக்கம் குறித்து அறிந்த அந்தப் பெண்ணின் குடும்பத்தினர், பலமுறை சரவணனை கண்டித்து எச்சரித்துள்ளனர். உறவினர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சரவணன் தனது தொடர்பை தொடர்ந்தது, இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே புகைந்து கொண்டிருந்த மோதலை தீவிரப்படுத்தியுள்ளது.


சம்பவத்தன்று இது தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் வெடிக்க, அது கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அந்தப் பெண்ணின் கணவர், மகன் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து சரவணனை தாக்கியுள்ளனர். அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், பலத்த காயமடைந்த சரவணன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

பின்னர், சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த கணவர் மற்றும் மகன் உள்ளிட்ட 3 பேரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More : பணம் இருந்திருந்தால் அன்றைக்கு நான் தான் CM..!! கூவத்தூர் ரகசியத்தை உடைத்த செங்கோட்டையன்..!! அதிர்ச்சியில் இபிஎஸ்..!!

CHELLA

Next Post

இன்ஸ்டா கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மகள்..!! அவமானத்திற்கு பயந்து துடிக்க துடிக்க தந்தை செய்த அதிர்ச்சி செயல்..!!

Fri Jan 23 , 2026
மதுரையை பூர்வீகமாகக் கொண்ட ஆறுமுகம் என்பவர், திருப்பூரில் உள்ள ஒரு சாயப்பட்டறையில் தனது குடும்பத்துடன் தங்கிப் பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மகள் சிம்யாவிற்கும், சக தொழிலாளி பிரேம்குமாருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், சிம்யாவிற்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் வாயிலாக வேறொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தந்தை ஆறுமுகத்திற்குத் தெரியவரவே, அவர் தனது […]
Madurai 2026 1

You May Like