திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? முடிவை அறிவிப்பதில் ஏன் தாமதம்? பிரேமலதா விளக்கம்..!

stalin premalatha

2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது..


இதில் பாமகவின் அன்புமணி அணி என்.டி.ஏ கூட்டணியில் சேர்ந்துள்ளது. டிடிவி தினகரனும் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ளார்.. எனினும் தேமுதிக தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.. திமுக, அதிமுக என இரு கட்சிகளுடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.. இன்று செய்தியாகளை சந்தித்த தேமுதிக கூட்டணியை அறிவிப்பதில் ஏன் தாமதம் என்று பத்திரிகையாள்ர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த பிரேமலதா “ கூட்டணியை அறிவிப்பதில் தாமதம் எல்லாம் ஒன்றும் இல்லை.. தேர்தல் தேதியே இன்னும் அறிவிக்கவில்லை.. பிப்ரவரி 20-க்கு பிறகு தான் தேர்தல் தேதி அறிவிக்கப் போகிறார்கள்.. எனவே எங்களுக்கு நிறைய நேரம் உள்ளது.  உரிய நேரத்தில் எல்லோரும் போற்றக்கூடிய கூட்டணியை அமைப்போம்..” என்று கூறினார்..

திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியதா என்பது குறித்து பதிலளித்த அவர் “ ஊடகங்கள் தினமும் ஒரு செய்தியை போட்டு வருகிறீர்கள்.. அதற்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது.. உரிய நேரத்தில் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்போம்..

இந்த முறை வெளிப்படையாக தான் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவோம். கூட்டணி உறுதியானால் நிச்சயம் அறிவிப்போம்.. என்.டி.ஏ கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை.. இன்னும் பல கட்சிகள் சேர உள்ளதாக சொல்கின்றனர்.. எந்த நேரம் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் மாறலாம்.. யார் வேண்டுமானாலும், எந்த கூட்டணியிலும் சேரலாம்.. தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும் வகையில் தெளிவான சிந்தனை உடன் நல்ல முடிவை எடுப்போம்.. தேர்தலுக்கு பிறகு எப்படியும் ஒரு ஆட்சி தான் வரப்போகிறது.. அது நல்ல ஆட்சியாக மக்களுக்கு நல்லது செய்யும் ஆட்சியாக இருக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை..” என்று தெரிவித்தார்.

Read More : Flash : தொடர்ந்து ஷாக் கொடுக்கும் தங்கம் விலை.. டஃப் கொடுக்கும் வெள்ளி..! இன்றைய நிலவரம் என்ன?

RUPA

Next Post

BREAKING | இவர்களுக்கு பென்ஷன் தொகை ரூ.3,000ஆக உயர்வு..!! சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!!

Sat Jan 24 , 2026
தமிழ்நாட்டில் அடித்தட்டு மக்களுக்கான சேவைகளை முன்னின்று நடத்தும் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களின் நீண்டகாலக் கனவு தற்போது நனவாகியுள்ளது. அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், அவர்களுக்கான ஓய்வூதியச் சலுகைகளை உயர்த்தி முதலமைச்சர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முதலமைச்சரின் இந்த புதிய உத்தரவின்படி, இதுவரை மாதம் 2,000 ரூபாயாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு ஓய்வூதியம் (Special […]
1035559

You May Like