Breaking : ஷாக்..! 2 முறை உயர்வு.. ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த தங்கம், வெள்ளி விலை ரூ.20,000 அதிகரிப்பு..!

gold silver

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை காலை, மதியம் என இரண்டு முறை உயர்ந்துள்ளது.. அந்த வகையில், காலை சென்னையில் ஆபரணத்தங்கம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்த நிலையில் பிற்பகலில் மேலும் ரூ.130 உயர்ந்து ரூ.14,750க்கு விற்பனையாகிறது.. இன்று காலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்த நிலையில், தற்போது மேலும் ரூ.1,040 உயர்ந்துள்ளது.. இன்று காலை ஒரு சவரன் தங்கம் ரூ.1,16,960க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் உயர்ந்து ரூ.1,18,000ஆக உயர்ந்தது..

இன்று காலை வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்த நிலையில் பிற்பகலில் மேலும் ரூ.10 உயர்ந்து ரூ.365க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.1,600 உயர்ந்துள்ளது.. அதே போல் வெள்ளி விலை ரூ.20,000 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read More : குட்நியூஸ் சொன்ன இன்ஃபோசிஸ்..! புதிய பட்டதாரிகளுக்கு 20,000 வேலைகள்..! ஆண்டுக்கு ரூ. 21 லட்சம் வரை சம்பளம்..!

RUPA

Next Post

1 முதல் 50 வரை எழுதாததால்.. 4 வயது மகளை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற கொடூர தந்தை..! பகீர் சமப்வம்..!

Sat Jan 24 , 2026
1 முதல் 50 வரை சரியாக எழுதவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தந்தை ஒருவர் தனது நான்கரை வயது மகளை அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.. 31 வயது கிருஷ்ணா ஜெய்ஸ்வால் என்பவர், சிறிய தவறுக்காக தனது மகள் வன்ஷிகாவை உருட்டுக்கட்டையால் பலமுறை தாக்கி, தரையில் தூக்கிப் போட்டுள்ளார். இந்தச் சம்பவம் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தின் ஜாட்சென்ட்லியில் உள்ள அவர்களது வாடகை வீட்டில் நடந்தது. அந்த குடும்பம் […]
crime 3f6b549e48 1

You May Like