விவசாயிகளே..!! இந்த அட்டை வைத்திருந்தால் ரூ.2 லட்சம் வரை கிடைக்கும்..!! அப்ளை செய்வது எப்படி..?

Agri Money 2026

தமிழ்நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயப் பெருமக்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ‘முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்’ மாநில அரசு மூலம் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டுமின்றி, விவசாயத்தை சார்ந்திருக்கும் கூலித் தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், தற்போது பல்வேறு நிதியுதவிகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் அடையாளமாக வழங்கப்படும் ‘மெரூன்’ நிறப் பாதுகாப்பு அட்டையை 18 முதல் 65 வயது வரையிலான ஆண், பெண் என இருபாலருமே பெற்றுக்கொள்ள முடியும்.


விவசாயிகளின் குடும்பப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அண்மையில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 514-ன் படி நிதியுதவிகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள் 04.08.2025-க்குப் பிறகு இயற்கை மரணம் எய்தினால், அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிதியுதவி 40,000 ரூபாயாக (இயற்கை மரணம் ரூ.30,000 + ஈமச்சடங்கு ரூ.10,000) உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக இது ஒட்டுமொத்தமாக 22,500 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு 2 லட்சம் ரூபாயும், விபத்தில் உடல் உறுப்புகளை இழப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரையிலும் இழப்பீடு வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டமானது வெறும் மரண உதவித்தொகையோடு நின்றுவிடாமல், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி மற்றும் முதியோர் ஓய்வூதியம் போன்ற பன்முகத் திட்டங்களையும் உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக, காசநோய் (TB), புற்றுநோய் (Cancer) மற்றும் சிறுநீரகப் பாதிப்பு போன்ற தீராத நோய்களால் தற்காலிகமாக இயலாமைக்கு உள்ளானவர்களுக்கும், எச்.ஐ.வி (HIV) தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கும் மாதாந்திர நிதியுதவி வழங்கப்படுவது இத்திட்டத்தின் மனிதாபிமான முகத்தைக் காட்டுகிறது.

நிதியுதவி பெற விரும்புவோர், பாதிப்பு அல்லது நிகழ்வு நடந்த 6 மாத காலத்திற்குள் உரிய ஆவணங்களுடன் அந்தந்தப் பகுதியில் உள்ள சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அறியாமை அல்லது தவிர்க்க முடியாத காரணங்களால் விண்ணப்பிக்க தவறியவர்கள், உரிய அதிகாரிகளின் ஒப்புதலுடன் ஒன்றரை ஆண்டுகள் (18 மாதங்கள்) வரை காலதாமதத்தைப் போக்கி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டல்களுக்கு மக்கள் தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர்களை (VAO) அணுகி, உழவர் பாதுகாப்பு அட்டையைப் பெற்று அரசின் இந்த அரிய சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Read More : தேர்வு கிடையாது.. 12ஆம் வகுப்பு, டிப்ளமோ முடித்திருந்தால் போதும்..!! இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!!

CHELLA

Next Post

பட்டா + சிட்டா + சர்வே எண்..!! நில ஆவணங்கள் குறித்த A to Z தகவல்கள்..!! இதை படித்தால் இனி ஏமாற மாட்டீங்க..!!

Tue Jan 27 , 2026
நிலம் அல்லது வீடு வாங்கும் ஒவ்வொருக்கும் பட்டா, சிட்டா என்பது அவசியமாகிறது. ஆனால், இவற்றின் உண்மையான அர்த்தம் மற்றும் முக்கியத்துவம் குறித்து பலருக்கு இன்னும் தெரிவதில்லை. இந்த ஆவணங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் தான், சொத்து விவகாரங்களில் பல மோசடிகள் அரங்கேறுகின்றன. எனவே, ஒரு சொத்தின் உரிமையாளராக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பட்டா, சிட்டா குறித்த தகவல்களை இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம். பட்டா என்றால் என்ன..? […]
Patta Chitta 2026

You May Like