“விஜய்யால் 41 குடும்பங்கள் அனாதையாகிவிட்டது.. கட்சி நடத்தி என்ன செய்யப் போகிறீர்கள்? இபிஎஸ் அட்டாக்..!

1332588

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அதிமுகவில் இணைய தயாராக இருப்பதாக ஓபிஎஸ் கூறியிருந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த இபிஎஸ் “ ஓபிஎஸ்-ஐ கட்சியை விட்டும் நீக்கும் முடிவு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது.. கட்சிக்கு துரோகம் இழைத்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளார்..


ஓபிஎஸ்-ஐ கட்சியை விட்டு நீக்கும் முடிவு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட என்பதால் அவரை சேர்க்க முடியாது.. கட்சியை துரோகம் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளார்.. இன்னும் சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இறுதியான பின்னர் தெரிவிக்கப்படும்.. தேமுதிக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை..” என்று கூறினார்..

விஜய் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர் “ விஜய் என்ன முக்கிய பங்கு வகிக்க போகிறார்.. அவர் வந்தால் தானே தெரியும்.. அதிமுக பொன் விழா கண்ட கட்சி.. 31 ஆண்டு கால ஆட்சியில் எத்தனை திட்டங்களை கொண்டு வந்தோம்.. அது போல் விஜய் என்ன செய்திருக்கிறார்.. நடிகர் என்பதால் அவருக்கு ரசிகர்கள் கூடுவார்கள்.

51 ஆண்டுகாலம் நாங்கள் மக்கள் பிரச்சனையை அனுபவம் மூலம் கண்டறிந்துள்ளோம்.. கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் மிகப்பெரியது.. விஜய்யின் பேச்சை கேட்பதற்காக வந்த கூட்டம் அது.. நேரடியாக கரூருக்கு விஜய் சென்றிருக்க வேண்டும்.. நாங்கள் உடனடியாக சென்றோம் தானே.. எங்களால் முடிந்த உதவியை செய்தோம்.. 41 குடும்பங்கள் என்ன நிலையில் இருக்கும்? கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உங்களால் ஆறுதல் கூட சொல்ல முடியவில்லையே..

இதன் பின்னரும் கட்சி நடத்தி என்ன செய்யப் போகிறீர்கள்? விஜய் திட்டமிடாமல் போனதால் தான் 41 குடும்பங்கள் அனாதையாகிவிட்டது.. ரசிகர் பட்டாளம் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியாது.. கொரோனா காலத்தின் போது விஜய் வெளியே வந்தாரா?

விஜய் சிறந்த நடிகர், ஆனால் சிறந்த அரசியல்வாதி இல்லை.. சிறந்த அரசியல்வாதி நாங்கள் தான்.. எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்துவிட்டதாக விஜய் கூறுகிறார், யாருக்காக அவர் வந்தார்..?.

யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்.. அவர்கள் பேசுவதை எல்லாம் பொருட்படுத்தி பேசிவிட முடியுமா? யாரையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை.. ஆனால் அரசாங்கம் நடத்த அனுபவம் தேவை.. அனுபவம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது.. அது மிகப்பெரிய கஷ்டம்..” என்று கூறினார்.

ராகுல் காந்தியை கனிமொழி சந்தித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த இபிஎஸ், திமுக டெல்லி சென்று கெஞ்சுவதாக கூறினார்.. கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா? என்பதில் குழப்பம் வந்துவிட்டதால் டெல்லி சென்று திமுக கெஞ்சுகிறது..” என்று இபிஎஸ் தெரிவித்தார்..

Read More : “அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்.. முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்த்து வருவது வெட்கக்கேடானது..” இபிஎஸ் காட்டம்..!

RUPA

Next Post

ராகு - புதன் பெயர்ச்சி: 18 ஆண்டுகளுக்குப் பின், இந்த 3 ராசிக்காரர்களுக்கு பொற்காலம் தொடங்கப் போகுது..!

Thu Jan 29 , 2026
ஜோதிடத்தின்படி, புதன் கிரகம் தோராயமாக ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறது. புதன் கிரகம் புத்திசாலித்தனம், தர்க்கம், தொடர்பு மற்றும் நட்புக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. மறுபுறம், ராகு கிரகம் கடுமையான வார்த்தைகள், சூதாட்டம், பயணம், திருட்டு மற்றும் தீய செயல்களுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. ராகு தோராயமாக ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறது. பிப்ரவரி மாதம் புதன் கும்ப ராசியில் நுழைகிறது. ராகு ஏற்கனவே […]
w 1280h 720imgid 01k0twbaavjv89xrpf4z4v41ygimgname gettyimages 1314493162 1753248803163 1

You May Like