Breaking : குட்நியூஸ்..! ஒரே நாளில் ரூ.4,800 குறைந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் ரூ.10,000 சரிவு..!

gold price prediction

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்றும் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அந்த வகையில், காலை சென்னையில் ஆபரணத்தங்கம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.600 குறைந்து ரூ.16,200க்கு விற்பனையாகிறது.. இன்று காலை சவரனுக்கு ரூ.4,800 குறைந்து ரூ.1,29, 600க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது… அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.415க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து, ரூ.4.15 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : தங்கம் விலை இனி குறையாது.. மக்கள் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு..! பொருளாதார ஆய்வறிக்கையில் அம்பலம்!

RUPA

Next Post

உங்களுக்கு வருவது சாதாரண தலைவலியா..? இந்த வேறுபாடுகளை தெரியாமல் இருப்பது உங்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்..!

Fri Jan 30 , 2026
அலுவலக வேலை அழுத்தம், படிப்புச் சுமை அல்லது குடும்பப் பிரச்சனைகள் என எதுவாக இருந்தாலும்… இன்றைய காலகட்டத்தில் தலைவலி ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. ஏறக்குறைய எல்லோரும் ஏதோ ஒரு சமயத்தில் தலைவலியால் அவதிப்படுகிறார்கள். இருப்பினும், நமக்கு வரும் ஒவ்வொரு தலைவலியையும் சாதாரணமானது என்று புறக்கணிப்பது ஆபத்தானது. ஏனென்றால், அது ஒற்றைத் தலைவலியாக (மைக்ரேன்) இருக்கலாம். சாதாரண தலைவலிக்கும் ஒற்றைத் தலைவலிக்கும் என்ன வித்தியாசம்? எப்போது மருத்துவரை அணுக வேண்டும்? புகழ்பெற்ற […]
mn when to see a neurologist for a headache

You May Like