ரஜினியின் பயோபிக் படம் வரப்போகுது..! சௌந்தர்யா சொன்ன குட்நியூஸ்..! சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்..!

rajinikanth 5

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை பலருக்கும் ஒரு உத்வேகம் என்று சொல்லலாம். ஆரம்பத்தில் ஒரு சாதாரண பேருந்து நடத்துநராகப் பணியாற்றிய அவர், அந்த வேலையை விட்டுவிட்டு தனது கனவுகளைத் துரத்தி சென்னைக்கு வந்தார். திரைப்படங்களின் மீதான ஆர்வத்தால் அவர் பல கஷ்டங்களையும் அவமானங்களையும் சந்தித்தார். தனது நிறம் மற்றும் மொழி காரணமாக பல கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.. ஆனால் அவர் அதையெல்லாம் கடந்து தனது தனித்துவமான பாணியால் ரசிகர்களின் இதயங்களை வென்றார்.


ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாகத் திரையுலகில் ஒரு சூப்பர் ஸ்டாராகவே வலம் வருகிறார்.. மேலும் 170-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்திற்கு தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல், ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் மில்லியன் கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

அவரின் திரைப்படத்தை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுகிறார்கள். அவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில், ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அவரது ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியைத் தெரிவித்துள்ளார்.

தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு பயோபிக் படத்தை உருவாக்குவதாகவும், அதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் கூறியுள்ளார். அந்தப் படம் வெளியானால் உலகளவில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் என்றும், ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு இளைஞர்களுக்கு ஒரு நல்ல உத்வேகமாக அமையும் என்றும் கூறினார்.

ஆனால் இந்தப் படத்தை யார் இயக்கப் போகிறார்கள்? ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.. இருப்பினும், இந்த பயோபிக் படம் குறித்த செய்தி ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்தின் வாழ்க்கையை வெள்ளித்திரையில் காண அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ரஜினிகாந்திற்கு 75 வயதானாலும் கூட ரஜினிகாந்த் தற்போது கூட பல இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தொடர்ச்சியாகப் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ‘கூலி’ என்ற படத்தில் நடித்த அவர், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்புப் பணிகளில் பிஸியாக இருக்கும்போதே, கமல்ஹாசனின் தயாரிப்பில் ‘தலைவர் 173’ என்ற தற்காலிகப் பெயரிடப்பட்ட மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

Read More : அரசு, தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா? தமிழக அரசுக்கு பா.ரஞ்சித் கேள்வி..!

RUPA

Next Post

கடத்தல், வெடிகுண்டு மிரட்டல்..! இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்..!

Fri Jan 30 , 2026
குவைத்திலிருந்து டெல்லிக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் கடத்தல் மற்றும் வெடிகுண்டு மிரட்டல் குறித்த குறிப்பு கண்டெடுக்கப்பட்டது.. இதையடுத்து, அந்த விமானம் வெள்ளிக்கிழமை அகமதாபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால், ஒரு பெரிய பாதுகாப்பு அச்சம் ஏற்பட்டது. விமானம் காலை 6.40 மணியளவில் பாதுகாப்பாக தரையிறங்கியது என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த விமானத்தில் 180 பயணிகள் இருந்தனர், அவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு, விரிவான பாதுகாப்புச் சோதனைகளுக்கு […]
AA1Ibndu

You May Like