2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் அறிவிப்புகள் :
* ஆதிச்சநல்லூர் உள்பட 15 இடங்களில் கலாச்சார மையம் அமைக்கப்படும்.
* கடலோர பகுதிகளில் தேங்காய் சாகுபடியை ஊக்குவிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
* கேரளா உள்ளிட்ட முக்கிய தென்னை வளர்ப்பு மாநிலங்களில் புதிய தென்னங்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படும்.
* ஷி என்ற பெயரில் பெண் தொழில்முனைவோருக்கு புதிய திட்டம் தொடங்கப்படும்.
* இந்திய முந்திரியை உலகளாவிய பிராண்டாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம்.
* நிதிக்குழு பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு ரூ.1.4 லட்சம் கோடி ஒதுக்கீடு.
* 16-வது நிதிக்குழு அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.
* மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை; 42% அளவிலேயே தொடரும்.



