BIG BREAKING | தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பில் மாற்றமில்லை..!! நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு..!!

income tax rules 2 2

2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் அறிவிப்புகள் :

* தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பில் எந்த மாற்றமும் இல்லை.

* மருத்துவக் கல்வி கடனுக்கான வரி 5%இல் இருந்து 2%ஆக குறைப்பு.

* வருமானம் குறித்த தவறான தகவல்களுக்கு 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.

* வெளிநாட்டு சுற்றுலாவுக்கான வரி பிடித்தம் 2%ஆக குறைப்பு.

* இந்தியாவில் தரவு மையங்களுக்கு 2047 வரை முழு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

* தனிநபர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதியும், வருமான வரி மறு மதிப்பீடுகளை சமர்பிக்க மார்ச் 31 ஆம் தேதி வரை அவகாசம்.

* வரும் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை ஜிடிபியில் 4.3 சதவீதமாக இருக்கும்.

* வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்துக்களுக்கான வரி குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Read More : BREAKING | “ஏப்ரல் மாதம் முதல் புதிய வருமான வரி சட்டம் அமல்”..!! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!!

CHELLA

Next Post

இனி சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு செல்ல 80 நிமிடங்கள் தான் ஆகும்..!! மத்திய பட்ஜெட்டில் வெளியான மெகா அறிவிப்பு..!!

Sun Feb 1 , 2026
இந்தியாவின் போக்குவரத்து வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் பாய்ச்சலை, 2026-27 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் நிகழ்த்தியுள்ளது. “இனி ரயிலில் செல்வது என்பது வெறும் பயணம் அல்ல; அது வானத்தில் பறப்பதற்கு இணையான ஒரு வேகம்” என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7 புதிய அதிவேக ரயில் (High-Speed Rail) வழித்தடங்களை அறிவித்துள்ளார். இதுவரை குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை மட்டுமே மையமாகக் கொண்டிருந்த புல்லட் […]
Train 2026

You May Like