கேன்சரால் படுத்த படுக்கையான மனைவி..!! பெற்ற மகள் மீது விபரீத ஆசை..!! 4 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த தந்தை..!!

Rape 2025 6

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் உப்லேட்டா பகுதியில், பெற்ற மகளையே தந்தை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போன 19 வயது இளம் பெண்ணை தேடி வந்த போலீஸார், ராஜ்கோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அவரை மீட்டனர்.


கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெண்ணின் தாயார் நான்காம் நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுப் படுக்கையில் இருந்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட தந்தை, தனது சொந்த மகளையே தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். தான் சத்தமிடும்போது அக்கம்பக்கத்தினருக்குத் தெரியாமல் இருப்பதற்காக, தந்தை ஆபாசப் படங்களை அதிக சத்தத்துடன் ஒலிக்கச் செய்து இந்த வக்கிரச் செயலில் ஈடுபட்டு வந்ததாக அந்தப் பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இந்தத் துன்புறுத்தலைப் பொறுக்க முடியாமல்தான் அவர் வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது.

விசாரணையில் மேலும் ஒரு அதிர்ச்சியாக, அந்த நபரின் 17 வயது மருமகளும் (சகோதரரின் மகள்) கடந்த 7 ஆண்டுகளாக இவரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது. மின்சாரத் துறையில் ஊழியராகப் பணியாற்றும் மாற்றுத்திறனாளியான அந்த நபர், குடும்ப உறுப்பினர்களின் பலவீனத்தை தனக்குச் சாதகமாக்கி இந்த அநாகரிகச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, போலீஸார் அந்த நபரை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதே சமயம், புற்றுநோயின் இறுதி நிலையில் இருக்கும் அந்தப் பெண்ணின் தாயாருக்குத் தேவையான உயர் மருத்துவச் சிகிச்சைகளை வழங்க மாவட்ட நிர்வாகம் தற்போது ஏற்பாடு செய்துள்ளது.

Read More : “உன் பொண்டாட்டியை எனக்கு பிடிக்கல”..!! பெட்ரோல் கேனுடன் வீட்டிற்குள் நுழைந்த கள்ளக்காதலி..!! அடுத்து நடந்த பயங்கரம்..!!

CHELLA

Next Post

உணவில் இந்த பொருளை குறைத்தாலே போதும்..!! இதயநோய், பக்கவாதம், சிறுநீரக கோளாறு வருவதை தவிர்க்கலாம்..!!

Mon Feb 2 , 2026
இந்தியர்களின் சமையலறையில் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கும் உப்பு, தற்போது பலருக்கு ஆயுட்கால நோய்களை பரிசாக அளித்து வரும் ஒரு நிசப்த கொலையாளியாக உருவெடுத்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) எச்சரிக்கைப்படி, ஒரு ஆரோக்கியமான மனிதன் நாளொன்றுக்கு 5 கிராம் (ஒரு தேக்கரண்டி) உப்பை மட்டுமே உட்கொள்ள வேண்டும். ஆனால், இந்தியர்களின் சராசரி உப்பு நுகர்வு 8 முதல் 11 கிராமாக இருப்பது மருத்துவ உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த […]
table salt 11zon

You May Like