விஜய் என்ன உத்தமரா? சம்பளத்தில் 75% கருப்பு பணம்.. அவர் ஊழலை பற்றி பேசலாமா? முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலடி..!

vijay dindgal srinivasa

தவெக கூட்டங்களில் திமுகவை மட்டுமே விமர்சித்து வந்த விஜய் தற்போது அதிமுகவை கடுமையாக விமர்சிக்க தொடங்கி உள்ளார்.. சில நாட்களுக்கு முன் நடந்த தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர் அதிமுகவை ஊழல் சக்தி என்றும் பாஜகவின் அடிமை என்றும் விமர்சித்தார்.. விஜய்யின் இந்த பேச்சு அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது..


எனவே அதிமுகவும் விஜய்யை கடுமையாக விமர்சிக்க தொடங்கியது.. விஜய்யை பனையூர் பண்ணையார் என்றும், விஜய் பேசுவதெல்லாம் குப்பை தான் என்றும் சாடியிருந்தது.. மேலும் சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி என்றும் அதிமுக விமர்சித்திருந்தது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற தவெக 3-ம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய விஜய் அதிமுகவை ஊழல் சக்தி என்றும் விமர்சித்தார்.. விஜய்யின் இந்த கருத்துக்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர் “ அதிமுகவை ஊழல் கட்சி என்று விஜய் சொல்கிறார்.. செங்கோட்டையனை பக்கத்தில் வைத்து ஊழலை பற்றி விஜய் பேசலாமா? செங்கோட்டையனை பற்றி விஜய் தெரிந்து கொள்ள வேண்டும்.. ஏனெனில் அம்மா ஆட்சியில் செங்கோட்டையன் அமைச்சராக இருந்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார்.. அம்மா மீண்டும் முதல்வரான போது அம்மாவின் கருணையில் செங்கோட்டையன் விடுதலை செய்யப்பட்டார்.

அந்த உத்தமனை வைத்துக் கொண்டு தம்பி விஜய், அதிமுகவை ஊழல் கட்சி என்று சொல்கிறார்.. ஊழல் கட்சி என்று சொல்லும் விஜய் உத்தமரா? படத்திற்கு ரூ.200 கோடி சம்பளம் வாங்கிவிட்டு 25% சதவீத பணத்தை கணக்கு காட்டிவிட்டு 75% பணத்தை கருப்பு பணமாக பதுக்கி வைத்துள்ளார். அதை எல்லாம் மத்திய அரசு பார்த்துக் கொள்ளும்.. அவர் கார் எடுத்து வந்ததற்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்துள்ளனர்.. அந்த நல்ல விஜய் தான் நம்மை பார்த்து ஊழல் என்று பேசலாமா? என்று கூறினார்..

RUPA

Next Post

நெருங்கும் தேர்தல்.. திமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி..!! அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்..!!

Mon Feb 2 , 2026
நாகை மாவட்ட திமுகவில் நீண்டகாலமாக சிறுபான்மையினரின் குரலாக ஒலித்து வந்த முக்கியத் தலைவர் ஜி.எஸ்.பி. அலிசாஹிப், இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ந்தது. மறைந்த இசை முரசு நாகூர் ஹனிபாவுக்கு மிகவும் நெருக்கமானவரான அலிசாஹிப், நாகை மாவட்ட திமுக சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்தவர். திமுக நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று நாகூர் ஹனிபாவுடன் சிறை சென்றுள்ளார். […]
ADMK 2026

You May Like