சென்னை தி.நகர் வண்டிக்காரன் சாலையில் பத்மா என்ற தூய்மை பணியாளர் கடந்த 11-ம் தேதி தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.. அப்போது குப்பையோடு கிடந்த கவர் ஒன்றில் இருந்த 45 சவரன் தங்க நகைகளை கண்டெடுத்தார்.. இதையடுத்து பத்மா அந்த தங்க நகைகளை பாண்டிபஜார் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்..
ஏழ்மையான சூழலிலும் பத்மாவின் இந்த நேர்மையான செயல் பலராலும் பாராட்டப்பட்டது.. பல்வேறு தரப்பினரும் பத்மாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் பத்மாவை நேரில் அழைத்து பாராட்டியதுடன் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்..
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பத்மாவை நேரில் அழைத்து பாராட்டினார். பத்மாவின் செயலை பாராட்டிய ரஜினிகாந்த் அவருக்கு பொன்னாடை போர்த்தி தங்க செயினையும் பரிசாக வழங்கினார்.. மேலும் “ இத்தகைய நேர்மை தான் சமூகத்திற்கு மிகச்சிறந்த உதாரணம்..” என்று நெகிழ்ந்து பாராட்டினார்.. மேலும் பத்மா வின் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் உடனும் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன..
Read More : தவெக புதிய எதிரியா? விஜய் குறித்து ஒரே வார்த்தையில் முதல்வர் ஸ்டாலின் சொன்ன ‘நச்’ பதில்..!



